“ மகிழ் கணிதம் ” - ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 12, 2022

“ மகிழ் கணிதம் ” - ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கை ( PAB Minutes ) இதுவரை பெறப்படாத நிலையில் பார்வையில் காணும் Appraisal Report - இல் உள்ளபடி Innovation ( Elementary ) தலைப்பின் கீழ் , 6948 அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய செயல்பாடுகள் வழியாக கணித பாடத்தை கற்பிக்க ஏதுவாக “ மகிழ் கணிதம் ” என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இச்செயல்பாட்டின் நோக்கம் , அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணித பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணித பாடப் பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பிப்பதன் மூலம் அவர்கள் கணித பாடத்தை பயமின்றி மகிழ்வுடனும் , எளிதாக புரிந்து கொண்டும் , ஆர்வத்துடனும் கற்கவும் வழிவகை செய்வதாகும்.


 மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிமையாக மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பித்தல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் , மேலும் Covid -19 காரணமாக ஆசிரியர்களுக்கான பயிற்சியை இணையதள வழியாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இணையதளவழி பயிற்சி என்பதால் மாணவர்கள் கணித பாடத்தை எளிதில் புரிந்து கொண்டு மகிழ்வுடன் கற்கும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து கணித ஆசிரியர்களுக்கு மகிழ் கணிதம் சார்ந்து பயிற்சியினை முதற்கட்டமாக 20.01.2022 மற்றும் 21.01.2022 ஆகிய 2 நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


Mazhil kanitham training Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி