பள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறை ஆகியவற்றில் நிகழாண்டில் 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியா் தகுதித் தோ்வு ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயா் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியா்கள், விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் போட்டித் தோ்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான தோ்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியில் 2ஆயிரத்து 407 போ் நியமனம் செய்வதற்கான தோ்வுகள் பிப்ரவரி 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும். ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தகுதித் தோ்வு நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியா் 3ஆயிரத்து 902, பட்டதாரி ஆசிரியா்கள் ஆயிரத்து 87 பணியிடம் என 4ஆயிரத்து 989 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளா் தோ்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்.
கல்லூரிகளில் காலியாகவுள்ள... அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளா் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்தில் 104 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுகளுக்கு உரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளாா்.
kalviseithi is totally waste
ReplyDeleteKalvi thurai than waste kalviseithi enna pannum
DeleteYes bro
ReplyDeleteErkanave tet pass pannavankalukku posting podunka sir. Unka achila than nallathu nadakumnu ninachom. 2013 tet pass candidates posting podunka sir
ReplyDeleteThis gov.will not satisfies these thing .our education minister Is like that only
ReplyDelete2013 டெட் பாஸ் பண்ணவங்களுக்கு போஸ்டிங் போடுங்க 2012 ல பாஸ் பண்ணவங்களுக்கு போஸ்டிங் போடுங்கன்னு இதுல சொல்லி என்ன பிரயோஜனம்? இத வந்து சிஎம் பார்த்துக்கிட்டு இருக்காரா இல்ல கல்விஅமைச்சர் தான் இந்த கல்வி செய்தியை பார்த்துகிட்டு இருக்காரா... அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்குங்கள்
ReplyDeleteEnnadhan seiradhu bro?
Delete2013 ku no job raja
ReplyDeleteஇந்த செய்தி முதலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் வெளியிட்டதா ஏனெனில் இந்த தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் இனையத்தில் இன்று இந்த நேரம் வரை இடம்பெறவில்லலையே
ReplyDeleteSir trb undated annual planner tngovt nalla aaapa vaithutarkal tet passed candidates ku
Deleteவெளியிட்டு விட்டார்கள். டெட் pass செய்தவர்களுக்கு மறுபடியும் நியமன தேர்வு. யேன் யாருமே வேண்டாம் என்று சொல்ல வில்லை.
DeleteTeachers selection board music drawing sewing not included in annual draft shame on the government for fighting for all the work
ReplyDeletePlease 2013 tet passed candidates ku posting poduga sir
ReplyDelete2013 TET தேர்ச்சி பெற்ற மக்கள் தமிழக அரசு தங்களுக்கு சாதகமாக இருக்கு என்று கூறி வந்த நிலையில் அரசு செய்த மிகப் பெரிய விடியல்
ReplyDeleteநடத்துங்கடா... என்ன நடத்தனுமோ நடத்துங்கடா...
ReplyDeleteCoaching centres only decide everything.
ReplyDeleteTET coaching,UG and SGT test,PG TRB coaching .......
ReplyDeleteSyllabus??
ReplyDeleteB.ed candidate manam yellam ranam
ReplyDeleteB.ed candidates manam yellam ranam
ReplyDeleteSLET,NET,தேர்ச்சி பெற்றவர்களுக்கும் நியமன தேர்வு வைப்பாங்களா?என்னப்பா இதெல்லாம்?
ReplyDeleteHow many Exams conduct for one job? First give job for 2013 Candidates as seniority.
ReplyDeleteஏன் ஆசிரியர் பணிக்கு மட்டும் இத்தனை முறை தகுதித்தேர்வுனு தான் எனக்கு புரியவில்லை. தகுதித்தேர்வு வச்சிங்க சரி எல்லா துறைக்கும் தேர்வு வைத்து Select பன்னு நீங்க இப்போ இன்னொரு exam வேறயா, இப்ப work பன்றteachers la தகுதி இல்லாதவங்களா. working la இருக்குறteachers la திறமையான மாணவர்களை உருவாக்கவில்லையா. ஏன் இதைலாம் யோசிக்காமா அடுத்தடுத்து exam announce பன்றாங்க. யார்க்கனவே tet la pass பண்ணி இருக்கிறவங்க நிலமை என்ன?
ReplyDelete