ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது - புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு உண்மை நிலவரம் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2022

ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது - புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு உண்மை நிலவரம் என்ன?

 

தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?


2020-ல் கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய முதல்வர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம், 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்களை வழங்குவதை அரசு தவிர்த்தது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால், ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என அதிமுக அரசு அறிவித்தது.


அதன்பின் பதவியேற்ற திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகளின் வாயிலாக பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


இந்நிலையில்தான், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வருதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறித்து புதிய தலைமுறை மட்டுமின்றி எந்தவொரு செய்தி நிறுவனமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.

இதுகுறித்து, புதியதலைமுறை இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்கையில், இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.

11 comments:

  1. 58. வர வரைக்கும் விடாதீங்க
    😆😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  2. Try to post to younger people much people waiting to serve

    ReplyDelete
  3. வரும் ஜனவரி 5எல்லாருக்கும் பெரிய ஆப்பு காத்து இருக்கு ஒய்வு பெறும் வயது 72 ஆக அறிவிப்பு வெளியாகும்

    ReplyDelete
  4. இனி அரசு வேலைவாய்ப்பு கிடையாது என்று ஒட்டு மொத்தமா சொல்லிவிடுங்க எதுக்கு வீணா வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நீட்டிப்பு முதுகலை தேர்வு தேதி அறிவிப்பு என்று எப்படியும் நிதிநிலை தற்பொழுது சுத்தம் பிறகு எதைவைத்து ஊதியம் கொடுக்க முடியும் ஏற்கனவே இலவச பேருந்தால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் ஓடுகிறது டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசு ஜி எஸ் டி வரியால் அதிக லாபம் அடைவது ஒன்றிய அரசுதான் தமிழ்நாட்டிலிருந்து தான் அதிக ஜி எஸ் டி வரி போகிறது ஆனால் நமக்கே நிதி கொடுக்க மறுக்கிறது ஒன்றிய அரசு பிறகு எவ்வாறு இதெல்லாம் சாத்தியம் மூன்றாவது அலை ஒமிக்கிறான் இப்படி 2023 மே மாதம் தேர்தல் முடிந்து நமக்கு சாதகமான அரசு மத்தியில் வரும் வரை இப்படித்தான் ஒவ்வொரு வைரஸா வந்திகிட்டே இருக்கும் சிந்திப்போம் நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி