ஓமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து ஃப்ளோரொனா.. இஸ்ரேலில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன்முறையாக கண்டுபிடிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2022

ஓமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து ஃப்ளோரொனா.. இஸ்ரேலில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன்முறையாக கண்டுபிடிப்பு!!

 

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த நிலையில், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

 1. CSIR NET JAN 29, FEB 5,6. THREE DAYS ONLY. NO PROBLEM. PGTRB. JAN 29 லிருந்து ஏதேனும் 3 நாட்கள் நடைபெறும்

  ReplyDelete
 2. Nice news
  Romba miukkiyamana seithi
  Innum kiraya virus varum pola iruku
  Tnd digital service

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி