பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு: முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு: முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்

பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதமிழக முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுதொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்திதேவி, செயலர் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பிஉள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் இரண்டே மாதங்களில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன. மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. எனவே,பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.


பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் இழப்பது கல்வியையும் கற்றல் திறனையும் மட்டுமல்ல; மதிய உணவையும்தான். பள்ளிகள் மூடப்பட்டாலும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்து மிகவும் குறைபாடு உடைய நலிந்த ஒரு தலைமுறைதான் நம் கண் முன் உருவாகும்.


அங்கன்வாடிகளிலும்..


இதற்கு நாங்கள் ஒரு யோசனையை முன்வைக்கிறோம். பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகளை 20 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பள்ளிக்கு வரவழைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவு வழங்க வேண்டும். இதே நடைமுறையை அங்கன்வாடிகளிலும் பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.

3 comments:

  1. மிக நல்ல கோரிக்கை. முதல்வர் அவர்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து , இதனை நடைமுறைப்படுத்த ஆவண செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. Muthala Sathunavu ulliyarukalukku appadea salary kuttavum permanent akkavum idea kudunga.athukkapparam in the idea kudunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி