மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறது:- குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2022

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறது:- குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாகிறது.

 

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 


இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்க உள்ளது. அதுபோல் மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயருகிறது. அடிப்படை சம்பளம் உயர்வதால், அகவிலைப்படியும் 31 சதவீதம் அளவில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பு குடியரசு தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



4 comments:

  1. மாநில அரசு ஊழியர்களுக்கு கிடைக்குமா?

    ReplyDelete
  2. போராடினால் தன் கிடைக்கும். ஜாக்டோ ஜியோ. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் உயர்ந்த உடன் போராட்டத்தை முன்னெடுப்போம்.

    ReplyDelete
  3. சம்பளம் கும்பளம்

    ReplyDelete
  4. Consolidated salary Kum uudthiya uyarvu erukka...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி