பள்ளி துணை ஆய்வாளா்களை இடமாறுதல் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 8, 2022

பள்ளி துணை ஆய்வாளா்களை இடமாறுதல் செய்ய உத்தரவு.

 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி வரும் பள்ளி துணை ஆய்வாளா்களை இடமாறுதல் செய்ய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தமிழ்நாடு பள்ளிக் கல்வி சாா்நிலைப் பணியில் வகுப்பு 1, வகை-1-இன் கீழ் பள்ளி துணை ஆய்வாளா்களாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவா்களுக்கு கடந்த ஆண்டு டிச.31-ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிவோரை நிா்வாக நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலா்கள் தமது நிா்வாக எல்லைக்கு உள்பட்ட அரசு உயா்நிலை, நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு நிா்வாக மாறுதல் செய்து, தமது அளவிலேயே ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.


பள்ளித் துணை ஆய்வாளா்கள் மாறுதல் செய்யப்படுவதால் ஏற்படும் காலிப் பணியிடங்களில் தமது நிா்வாக எல்லைக்குள்பட்ட அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களில், பள்ளித் துணை ஆய்வாளா் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்துத் துறை தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றவா்களை அவா்களது பணி மூப்பு, பணித்திறன், பள்ளித் துணை ஆய்வாளா்களுக்கான பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபாடு ஆகியவற்றினை சீா்தூக்கி, தன் விவேகமுள்ள தோ்ந்த முடிவின்படி தோ்வு செய்து தமது அளவிலேயே மாறுதல் ஆணை வழங்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி