அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2022

அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்

 

அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.

பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும். 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

25 comments:

  1. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்தால் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் எல்லாம் ஆங்கிலத்தில் சும்மா degree வாங்குனவர்கள்தான்...ஒன்னும் ஆங்கிலம் பேச வைக்க மாட்டார்கள்...both govt and private teachers

      Delete
  2. அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆங்கில வழிக் கல்வி கற்க ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஆங்கில மொழி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மாதிரி வகுப்பறையில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உற்றுநோக்கி அதில் ஆங்கில பேச்சுத் திறனும் கற்பித்தல் திறனும் மிக்க ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்காமல் வெறும் மதிப்பெண்களை மட்டுமே அளவீடாக கொண்டு பணியமர்த்தினால் கல்வித்தரம் எப்படி மேம்படும்

    ReplyDelete
  4. trb தேர்வு எழுதி பின் நேர்முக வகுப்பு எடுக்க சொல்லி வேலைக்கு தேர்வு செய்ய வேண்டும்,

    ReplyDelete
    Replies
    1. ௮னைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு வைத்து பிறகு சம்பள ௨யர்வு, புரமோசன் கொடுக்கலாம்?

      Delete
    2. அப்படி வைத்து விட்டால் நமது அரசு எப்போதே முன்னேறி இருக்குமே

      Delete
  5. English teachers who teach in English are all in private schools......

    ReplyDelete
  6. IELTS, TOFFEL exam clear பண்ண சொல்லுங்க.இல்லனா,1 to 12th english medium படிச்ச டீச்சர்ஸ மட்டும், english medium க்கு appoint பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. English one the communication launguage not knowledge.

      Delete
    2. dei Badu boss... your comment shows your langauge proficiency. everyone knows English is just a language, but teaching English is something different teaching in English.

      அப்போ தமிழ் கூட ஒரு மொழி தான், 10 மட்டும் படிச்சவன வச்சு வாத்தியார் வேலை குடுக்க முடியுமா?! இலக்கணம் இலக்கியம் பேச்சு திறமை எல்லாம் வேணுமே... அது போல தான் ஆங்கிலமும், ஆங்கில ஆசிரியர் ஆங்கில வழி மூலமா மட்டுமே பாடம் நடத்தனும்...

      Delete
    3. Poda arivuketta nayae ithula yarvenumnalum karuthu sollalam unakku ennada

      Delete
    4. atha than da nanun soldren... vai poonava saathittu po

      Delete
  7. நம்ம கிட்ட நட்டுறே புட்டுறே தான் இருக்கு 😆😆😆

    ReplyDelete
    Replies
    1. நிறைய வாத்திங்க இங்கிலீஷ் எல்லாம் குண்ணாமலை டீ கடை, பனோன்மணியம் போண்டா கடைல தான் படிக்காம வீட்டுல உக்காந்து பார்த்து எழுதி டிகிரி வாங்கிருக்கான்...

      Delete
  8. We have much more higher officers studying in Tamil medium only

    ReplyDelete
  9. Students understand mobile' english comments but they can't learn english books

    ReplyDelete
  10. பெரும்பாலும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக திருட்டு குந்தாணிகள் தான் உள்ளனர். விரைவில் பதவி உயர்வு பெறுவதற்காக இந்த பரட்ட தலைச்சிகள் பிட் அடித்து ஆங்கில பட்டமும் பெற்று விடுகிறார்கள். வகுப்பில் பாடம் நடத்த தெரியாது. அதை மறைக்க பல மொல்லமாறி வேலைகளை செய்து வெட்கமே இல்லாமல் ஆட்டிக் கொண்டு திரிகின்றன இந்த திருட்டு குந்தாணிகள்.

    ReplyDelete
    Replies
    1. தலைமை ஆசிரியர்கள் அப்படியே

      Delete
  11. மானக்கெட்டவன்

    ReplyDelete
  12. பள்ளிகள் துப்புறவாக வைக்கவேண்டும் என்று அறிவுரை கூறும் அரசும் பள்ளிக்கல்வித்துறையும் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்துள்ளது. இப்பணியை யார் செய்வது.துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்:

    ReplyDelete
  13. English medium la kooda teach pannum podhu Tamil la explain pannaa thaan students ku puriyudhu.adhai first purunchukonga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி