வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2022

வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!.

வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!. 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்!

எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் செலவின அடிப்படையில் வருமான வரி விதிக்கும் புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

வருமானத்திலிருந்து செலவழிப்பது என்பதிலிருந்து செலவுகளுக்கேற்ப வரி விதிப்பதன் மூலம் ஆடம்பர செலவு குறித்த நுகர்வு குறையும். அதேசமயம் சேமிப்பு அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டின் நிதி நிலையை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும். அதேசமயம் வரி சீர்திருத்தங்கள் மூலமும் பொருளாதாரத்தில் ஸ்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சட்டங்களும் இடம்பெறும். அந்த வகையில் சில வரி சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் எதிர்வரும் பட்ஜெட்டில் (2022-23) கொண்டுவருவார் என்று தெரிகிறது. இதன்படி நேரடி வரி விதிப்பு முறையில் செலவின வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது வருமான வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் மாற்றமாக இருக்கும்.

இப்புதிய வரி விதிப்பு முறைஏற்கெனவே வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் 6.32 கோடி மாதாந்திர சம்பளதாரர்களுக்கு சலுகையாக இருக்கும். அதே சமயம் ஸ்டார்ட்அப் நிறுவனங் களைத் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு இந்த சலுகை பொருந்தாது.

மாதாந்திர சம்பளதாரர்கள் வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதில் செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெற பல்வேறு காரணிகளை தாக்கல் செய்ய வேண்டும். அதை வருமான வரித்துறையினர் தீவிரமாக பரிசீலித்து அதில் உள்ள உண்மைத் தன்மையின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையை திரும்ப அளிப்பர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கம் கோருவது அல்லது சட்ட ரீதியாக வழக்கு தொடர்வது போன்ற பிரச்சினைகளும் நடைமுறையில் உள்ளன. சட்ட ரீதியாக அணுகும் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

அதேபோல டிடிஎஸ் எனப்படும் ஒருமுனை வரி பிடித்தம் செய்யும் முறையையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு அவர்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 (பத்திரிக்கை செய்தி)



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி