கல்லூரி, பல்கலை விரிவுரையாளர் பணி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2022

கல்லூரி, பல்கலை விரிவுரையாளர் பணி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

 

இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட உள்ள விரிவுராயாளர், இளநிலை உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 


தேர்வு: CSIR-UGC NET Exam-2021


தகுதி: ஏதாவதொரு அறிவியல் துறையில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக், பி.பார்ம், எம்பிபிஎஸ் போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். 


வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 


எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் குறைந்தது 50 சதவிகத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2022 - 06.02.2022


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022


மேலும் விவரங்கள் அறிய  www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

2 comments:

  1. TRB PG coming Soon this exam date. 29.1.2022 t6.2.22 மாற்றம் வருமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி