Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் - ஞாயிறு பொது முடக்கம் ரத்து - தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2022

Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் - ஞாயிறு பொது முடக்கம் ரத்து - தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு.கல்வி நிறுவனங்கள் 

1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் . 

2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக ( Covid Care Centre ) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . 

இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது 

ஊரடங்கு நீக்கம் :

28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது . 


வரும் ஞாயிற்றுக்கிழமை ( 30-1-2022 ) முழு ஊரடங்கு கிடையாது .

4 comments:

 1. தேர்தல் வந்தால் காணாமல் போகும் corona!!!

  ReplyDelete
 2. தேர்தல் வந்தால் மட்டும் கொரனா தொற்று லாக்டவுன் கிடையாது. தயவுசெய்து கொரனா லாக்டவுன் இனி வேண்டாம். மக்களிடம் விழிப்புணர்வு வந்து விட்டது.

  ReplyDelete
 3. அரசு இதே நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்தால் நல்லது. இல்லை மறுபடியும் செய்தி சேனல்களின் கொரோனா பீதி பரப்புரைகளை நம்பியும், கல்வியில் விருப்பமில்லாத மாணவர்களின் போலி கொரோனா பயத்தை செவிமடுத்தும், கொரோனாவில் ஆதாயம் பார்க்க நினைக்கும் சந்தர்ப்பவாத மருத்துவர்களின் அதீத கொரோனா பூச்சாண்டிகளுக்கு அடிபணிந்தும், சுய புத்தியில்லாமல், எதையுமே பொத்தாம் பொதுவாக பேசும் எதிர்க்கட்சிகளின் அரசியல் தந்திரங்களுக்கு பலியாகாமலும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இனி கொரோனா வந்தாலும் சிறந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அது முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்தாலே போதும். இனியும் ஊரடங்கு போடும் முன் எத்தனை பேரது வாழ்க்கை இந்த லாக்டவுனில் சீரழிந்து பாழாய்ப் போனது என்பதை
  ஆள்வோர்கள் சற்று மனசாட்சியுடன் சீர்தூக்கப் பார்த்துச் செயல்பட்டால் மக்கள் அரசியல் மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

  ReplyDelete
 4. Koranaval adikam pathikka paduvadu manavarkaldan padukappudan nadthavendum kalvi oru nattukku mikavum mookkiyam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி