Teachers Transfer Counselling 2022 - முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிட விவரத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2022

Teachers Transfer Counselling 2022 - முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிட விவரத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.

2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.




பார்வை -1 ல் காணும் அரசாணையின்படி 2021-22ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தவிர்த்து பிற அனைத்து வகையான ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் முறையீடுகள் Claims & Objections ) ஏதுமிருப்பின் அதுகுறித்து மேல்முறையீடு செய்ய 25.1.2022 மாலை 8.00 மணி வரை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களால் தெரிவிக்கப்படும் முறையீடுகளை சரிபார்த்து ஒப்பிட்டு CEO Login ID ல் உரிய ஒப்புதல் ( Approval or rejection ) அளித்திட வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி