எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2022

எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கடந்த பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: 

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம்  பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர்.

 ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அப்போதைய அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. 
மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட ஆங்காங்கே அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம்  எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் "

 இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/8/2010  முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெற்று , பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

10 comments:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி வாய்ப்பு நடைபெற தடையாக GO 165 நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் விலகி கொள்ள படுமா????

    ReplyDelete
  2. Pass pannavan vela illama saagaraan.... Salary vanguravan pass panna mudiyaama saagaraan...

    ReplyDelete
    Replies
    1. கொடுமை அய்யா கொடுமை.

      Delete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் இரண்டிற்கும் அரசு தான் சம்பளம் வழங்குகிறது. இரண்டு பள்ளிகளுக்கும் ஒரே சட்டம் தான். நீங்க TET எழுதி தேர்ச்சி பெறுங்கள் அல்லது TET தேர்ச்சி பெற்றவர் அந்த பணிக்கு செல்லட்டும் இது தானே சரி. திறமை இல்லாதவன் தான் இது போல சலுகை எதிர் பார்க்கணும்.

    ReplyDelete
  4. 1000 காலி பணி இடம் கிடைத்தால் 1000 poor குடும்பம் பிழைக்கும். தயவு செய்து நீங்கள் மனசாட்சிகு நேர்மையாக உங்கள் பணியை விட்டு கொடுங்கள்.

    ReplyDelete
  5. 10 ஆண்டுகளாக TET தேர்ச்சி பெற முடில, நீங்க எல்லாம் எப்படி மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பிர்கள்,கால கொடுமை

    ReplyDelete
  6. People depending on govt aided school s are enjoying lot of facilities but think of the people who are not depend ing up on it.

    ReplyDelete
  7. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணிபுரியPGTRB தேர்வு எழுதி தேர்வாக வேண்டுமா?

    ReplyDelete
  8. Pls permanant the part-time teacher we are working past 10 year.tThe c.m of m.k Stalin give the promise in election.i will permanant the part-time teacher.This is our right.u ask the vote no.do some thing

    ReplyDelete
    Replies
    1. Surely we will permanent in 2024. Before MP election we permanent. Don't feel.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி