TNPSC - துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் புதிய நடைமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2022

TNPSC - துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் புதிய நடைமுறை!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய நேர்முக கடிதத்தில் , மே -2021 ல் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் குறித்து அரசிதழ் bulletin வாயிலாக தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் , இனி தமிழ்நாடு தேர்வாணைய துறைத்தேர்வு முடிவு வெளியீடுகளை ( அரசிதழ் ) அச்சிட்டு வெளியிடுவது என்பது கைவிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


எனவே இணையதள வெளியீட்டினை ஆதாரமாக ( authenticated Document ) கொண்டு தகுதிகாண் பருவம் விளம்புதல் , பதவி உயர்வுகள் போன்றவற்றை பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக , தேர்வாணைய இணையதள வெளியீட்டு முடிவுகளை e - bulletin அங்கீகரிக்கப்பட்ட ஆதாரமாக ( authenticated Document ) கொள்ளலாம் என்றும் பார்வையில் காணும் நேர்முக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பணிப்பதிவேட்டில் துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் குறித்து பதிவுகள் மேற்கொள்ள தற்போது பெயர் / தகப்பணர் பெயர் / பிறந்ததேதி / முகவரி / பதிவெண் ஆகிய அனைத்து விவரங்களுடன் அரசிதழ் ( e - bulletin ) ஒருங்கே வெளியிடப்படுவதால் தேர்வாணைய நுழைவுச் சீட்டு கோரி பணியாளர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் , நுழைவுச் சீட்டு இருப்பின் அதனை பரிசீலனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


 இந்நேர்வில் , பணியாளர்கள் தாயலகு மாவட்டத்தை தவிர்த்து இதர காரணங்களுக்காக பிற மாவட்டங்களில் துறைத்தேர்வு எழுதும் பட்சத்தில் அப்பணியாளர்கள் மட்டும் நுழைவுச்சீட்டினை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும் என அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவித்து தங்களது நிலையில் சுற்றறிக்கை அனுப்பி , அச்சுற்றறிக்கையின் சார்வு நகலினை சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி