அடுத்த 3 ஆண்டுகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2022

அடுத்த 3 ஆண்டுகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

 

அடுத்த 3 ஆண்டுகளில் பணி ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


இதற்கிடையே, அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னேற்பாடாக ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து, இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. I this government have been to give job to 2013 batch after 3 years??

    ReplyDelete
    Replies
    1. 2013ன்னு சொல்லாதீங்க நானும் 2013 தான் டெட் பாஸ்ன்னு சொல்லுங்க ஒற்றுமையே வலிமை...

      Delete
  2. TN education minister and Honerable CM. Pl reduce retirement age.. Lot of young people will get offer...

    ReplyDelete
    Replies
    1. ஆந்திரா மாதிரி 62 ஆகக்கூடாதுன்னு திருப்பதி வெங்கடாசலபதிய வேண்டிக்கோங்க...😄😄

      Delete
  3. இதெல்லாம் தேர்தல் நாடகம்

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா வருஷா வருஷம் நடக்கற நாடகம்.... எம்பிளாய்மென்ட் பதிவு எண்ணிக்கை போடுவாங்களே அத மாதிரி...

      Delete
  4. Yes therthal nadagankal DMK thirutu pasanga ivanunga ADMK Vida mosamanavanga therthal arikkaiyil sonna onnu kooda niraivethala

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஜி சமாளிக்கிறீங்க ... சொன்னது சொல்லியாச்சு.... அப்புறம் என்ன.... கமெண்ட் டெலீட் பண்ண முடியலையா 😄😄😄

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி