தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு - பாடப் பகுதிகளை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 1, 2022

தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு - பாடப் பகுதிகளை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.

 

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், மாணவா்களின் வருகைப் பதிவு 100 சதவீதம் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த முறையில் சுழற்சி முறையில் அல்லாமல் 100 சதவீத மாணவா்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்ததால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவா்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் பள்ளி நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா். பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்பட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


பொதுத்தோ்வு, ஆண்டு இறுதித் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும் என்பதால் அனைத்து மாணவா்களையும் தினமும் பள்ளிக்கு அனுப்புமாறு அவா்களது பெற்றோரிடம் ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். கற்பித்தலுக்கான நாள்கள் குறைவாக உள்ளதால் பாடப் பகுதிகளை மாணவா்களுக்குப் புரியும் வகையில் முழுவீச்சில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 comments:

 1. எங்களுக்கு மீட்டிங் இருக்கு, எப்படிப்பா விரைந்து முடிகிறது?

  ReplyDelete
 2. அன்பு ஆசிரிய சங்க தலைவர்களே, தற்போது வர இருக்கும் பணி நிரவல் பற்றி தெரியுமா? 110 மாணவர்கள் படிக்கும் High school ku 5 ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளன.
  1. தொடர்ந்து 8 பாட வேலை பாடம் நடத்த முடியுமா? அவ்வாறு நடத்தினால், அதன் தரம் எப்படி இருக்கும் ?
  2. ஆசிரியர்கள் CL, EL and ML எடுத்தால் மாணவர்கள் என்ன செய்வார்கள்?
  3.செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணததில் அரசு தவறான முடிவு எடுத்துள்ளது.
  4. கல்வி துறை விதியில் ஒரு வாரத்தில் 40 பாட வேலை எடுக்க சொல்லி இருக்கிறதா?
  5. தரத்தை பற்றி கவலை படாமல், செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முடிவு எடுக்கிறார்கள்.
  6. கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு தொடர்ந்து பயிற்சி தருகின்றனர். ஆசிரியர் பயிற்சி ku சென்று விட்டாள் , அந்த வகுப்பு மாணவர்கள் என்ன செய்வார்கள்?
  தயவு செய்து ஆசிரியருக்கு தரும் சம்பளம் செலவல்ல , முதலீடு என்பதை ஆட்சியாளர்களுக்கு புரிய வையுங்கள்.
  குறைந்த பட்சம் ஒரு High school ku 7 ஆசிரியர்களை நியமிக்க சொல்லுங்கள்.
  சந்தா வங்குரோம், கூட்டம் போடுவதொடு நமது கடமை முடிவதில்லை. நன்றி.

  ReplyDelete
 3. அனைத்துவகை மாணவ மாணவிகளுக்கும்,அனைத்து வகையான போட்டித்தேர்வுகளில்(TRB,TET,NET/SET,NEET,JEE,UPSC,SSC,TNPSC,RRB,MRB,Banking,NTSE,NMMS,KVPY,OLYMPIAD)வெற்றிபெற எமது UPDATED STUDY MATERIALS-வாங்கிப் பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.Dr.M.MOORTHI,M.A.,B.Ed.,M.Phil.,PhD(ENGLISH)KRP of SOUTH INDIA,GOVT(BOYS)Hr.Sec.School,Sayalkudi,Ramnad(Dt),Tamilnadu,INDIA.Pls call-6383704493,Whatsapp-9655312356.pls share to all

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி