பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2022

பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் பள்ளிக் கல்வி கமிஷனரக வளாகத்தில், முற்றுகை போராட்டம் துவங்கிஉள்ளனர்.

அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். மாத சம்பளம்ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு, 2012ம் ஆண்டு, 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டது. பின், படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு, 2016 முதல், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை


சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். 'பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., அறிவித்தது.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஒன்பது மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மாநில தலைவர் சேசுராஜா தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள, ௨,௦௦௦க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என, அறிவித்துள்ளனர். தங்களது பணி நிரந்தர கோரிக்கையை, பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.



7 comments:

  1. All problems made by ADMK but i request to clear all the teaching field problems like TET, partly teachers

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    ReplyDelete
  3. உயிரை வாங்காதீங்க... Counselling நடத்துறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? தங்க முடியலடா சாமி.Reply

    ReplyDelete
  4. ஒழுங்கா ஒரு கவுன்சிலிங் நடத்த துப்பில்ல. இதுக்கு அவங்களே பரவால்ல

    ReplyDelete
  5. Government should consider and take quick action

    ReplyDelete
  6. 2021 April than 10000 salary before 7000 than why post wrong information?? Nearby 7000 people participated. All are lady teachers. Toilets are locked.ladies wait restroom nearly fifty minutes. Each and every time.

    ReplyDelete
  7. 💪💪👍👍💐💐👍👍💪💪
    என் இனமான அறிவார்ந்த அன்பான ஆசிரியர் சொந்தங்களே!! உங்கள் அனைவருக்கும் பாசார் மு.புகழேந்தியின் நெஞ்சம் நிறைந்த வணக்கம் 🙏🙏

    இதோ போராட்ட களம் தயாராகி விட்டது

    வாருங்கள்

    உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறேன்
    வாருங்கள்

    💪💪 போராட்டமே
    வாழ்க்கை 💪💪

    * தேவையை உணராமல் போராட முடியாது

    * போராடாத நீ
    வாழ முடியாது!!

    * போராடு ......
    தோல்விகள் தோற்கும் வரை போராடு!!!

    * துவண்டு விடாமல்
    போராடு....

    * திட்டமிட்டு போராடு....

    * தீர்க்கமாக போராடு......

    * அறவழியில் போராடு ....

    அதற்கு
    உன்னை அர்ப்பணித்து போராடு!!!

    * எதிரியின் ஆயுதம்
    கண்டு போராடு....

    அதைவிட
    பன்மடங்கு ஆயுதம் கையில் கொண்டு போராடு!!

    * போராட்டம் வெல்லும் வரை போராடு....

    காலம் சொல்லும் வரை போராடு!!

    * சாதி, மத, இனம் களைந்து போராடு....

    சரித்திரம் - உன்
    சாதனை சொல்லும் வரை போராடு!!

    * விருப்பம் கொண்டு போராடு.....

    விடியல் வரும் வரை போராடு!!

    * தளராமல் நீ போராடு.....

    தடைகளை தகர்த்தெறிய போராடு!!!

    * வீரநடை போட்டு
    வெற்றி கனி
    கிட்டும் வரை போராடு!!

    * வேட்கை அடைய போராடு.....

    வேங்கை போல் போராடு!!

    * வேண்டியதை அடைய போராடு....

    வெளியுலகம் அறியும் வரை போராடு!!

    * நம்பிக்கையுடன்
    போராடு....

    தன்னம்பிக்கையுடன் போராடு!!!

    * வீறு கொண்டு போராடு.....

    விடாமுயற்சியுடன் போராடு!!!

    * மனம் தளராமல் போராடு.....

    மறுநியமனததேர்வை ரத்து செய்யும் வரை போராடு!!

    * ஏதோ போராடினோம் என்றில்லாமல்....

    எழுச்சியோடு
    போராடு!!

    * உறங்கி கிடந்தால்
    சிலந்தியும் உன்னை
    சிறை பிடிக்கும்!!

    * எழுந்து நடந்தால்
    இமயமும் உனக்கு
    வழி கொடுக்கும்!!

    என் வாழ்க்கை சிதைந்தாலும் பரவாயில்லை

    என் ஆசிரியர் சமூகமே

    என் ஆசிரியர்
    இனமே

    உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்!!

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போராடிய 72 மணி நேரம் மறக்க இயலாது

    நடந்து நடந்து
    என்
    கால்கள் தளர்ந்தது
    என்
    உடலும் தளர்ந்தது!!

    ஆனால்
    மனம் மட்டும் தளரவில்லை!!

    என் கூக்குரல் தங்கள் செவிகளைத் துளைக்கவில்லையா??

    என் ஏக்கம் தங்களுக்கு
    தெரியவில்லையா??

    ஏன் இந்த ஓரவஞ்சனை???

    ஏன் இந்த செயலை முன்னெடுத்தேனோ
    என்று எண்ண வைக்காதீர்கள்...

    நான் முன் வைத்த காலை
    பின் வைக்க மாட்டேன்

    என் கழுத்திற்கே கத்தி வந்தாலும் கூட
    ஒருபோதும் இந்த
    பாசார் மு.புகழேந்தி
    விலை போக மாட்டான்!!

    டி.ஆர்.பி. நம்மை
    உள்ளே விட மறுத்து

    தேர்ச்சி பெற்றும்
    பலன் இல்லாமல் போனதே...
    அய்யோகோ !

    தடைகள் தாண்டி போராட
    ஏற்ற உடைகள் எடுத்து வாருங்கள்

    ஆயிரம் தோல்விகள் கிட்டினாலும்
    ஆங்கொரு வெற்றிக்கு
    அனுபவமே ஆசான்!!

    ஆசான்களாகிய நாம் அனைவரும்

    ஒன்றுபட்டு போராடுவோம்!!

    ஒற்றுமையுடன் போராடுவோம்!!

    நம் குரல் ஓங்கி ஒலிக்கும்
    வரை போராடுவோம்!!

    கடந்து வந்த பாதைகள்
    நம்மை கலங்க வைத்தாலும்.....

    வரவிருக்கும் பாதைகள்
    நம்மை வாழ வைக்கட்டும்!!

    * காலம் கனிந்து விட்டது!!

    களம் தயாராகி விட்டது!!

    டி.ஆர்.பி. முடிந்து விட்டது

    தேர்தலும்
    முடிந்து விட்டது

    கூடவே
    தேர்தல் முடிவுகளும்
    வந்து விட்டது.

    அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
    இருக்கும் போது
    நாம் மட்டும் ஏன்
    அழுதுகொண்டும்
    புலம்பிகொண்டும்
    இருக்க வேண்டும்.

    ஆகவே

    களத்தை நோக்கி வாருங்கள்

    சென்னையை நோக்கி
    வாருங்கள்

    டி.பி.ஐ. நோக்கி
    வாருங்கள்

    முயற்சி நமதானால்
    வெற்றியும் நமதே!!

    * ஆயிரம் பிரிவுகள்
    நம்மில் இருந்தாலும்....

    ஆசிரியராய் இணைந்து
    நிற்போம்!!!

    அழைக்கிறேன்...
    ஆசிரியர்
    பாசார் மு.புகழேந்தி

    💪💪புரட்சி ஓங்குக💪💪

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி