அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2022

அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


School Grant Proceedings - Download here...

ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வியின் கீழ் , 2021-22 ஆம் கல்வியாண்டில் பார்வையில் காணும் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின்படி , Quality Components ( Elementary ) என்ற தலைப்பில் , நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ( Twining of Schools ) என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் எனமொத்தம் 16432 பள்ளிகளுக்கு ( ஒரு பள்ளிக்கு ரூ .1000 / - வீதம் ) ரூ .164.32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ” அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதே இச்செயல்பாட்டின் உரிய நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிமாற்றுப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள் , கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப்பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் , பல்வேறு இயற்கை சூழல்கள் , அலுவலகங்கள் , வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி