ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2022

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 

பணி நிரந்தரம் கோரி, மூன்று நாட்களாக நடத்திய முற்றுகை போராட்டத்தை, பகுதி நேர ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.


தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை நடத்தும் வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, 24ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை துவங்கினர்.

கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சங்க நிர்வாகிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று பேச்சு நடத்துகின்றனர்.

2 comments:

  1. உங்களுக்கு வேலை கொடுத்தால் சீனியரிட்டி யில் இருக்கும் நாங்க வாயில விரலை வச்சுக்கணுமா. போங்கடா. Case போடுவோம்

    ReplyDelete
  2. எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு வாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி