முதுநிலை ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 10, 2022

முதுநிலை ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது. 

மாநிலம் முழுதும் 160 முதல் 180 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 'தேர்வு எழுத வருவோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். 'ஊசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக் கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ- - மெயில் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து 'நெட் செட்' பட்டதாரிகள் சங்க செயலர் தங்கமுனியாண்டி கூறியதாவது:இதற்கு முன் நடந்த எந்த தேர்விலும் இந்த கட்டுப்பாடு இல்லை. டி.ஆர்.பி. மட்டுமே திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கையிலும் குறிப்பிடவில்லை. எனவே தேர்வர்கள் பாதிக்காத வகையில் இந்த கட்டுப்பாடுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

 1. Read the instructions carefully in the District hall ticket

  ReplyDelete
 2. கோவிட்-19 சோதனை நிலை தடுப்பூசி திட்டத்தின் தெளிவின்மையின் காரணமாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு பணி / பொது இடங்களில் பாகுபாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய காரணத்திற்காக, தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நிர்பந்திக்கப் படுகிறார்கள். எனவே, இத்தகைய நிர்பந்தங்கள் என்பது அவர்கள் மீது செய்யப்படும் நேரிடையான திட்டமிட்ட படுகொலை முயற்சிகள் எனக் கருதத் தோன்றுகிறது (IPC பிரிவு 308 இன் படி தண்டனைக்கு உரிய குற்றச்செயல்). இது நமது அரசமைப்பு சாசனத்தின் 14, 19 & 21 வது பிரிவு, & உயிரியல் மற்றும் மனித உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனத்தை (Universal Declaration on Bioethics and Human Rights) நேரடியாக மீறுகிறது.

  மேலும், இத்தகைய பாகுபாடுகள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதற்கு நிர்ப்பந்தத்தை உருவாக்குவதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றும் போட்டுக்கொள்ளாத நபர்களுக்கு இடையே பகையுணர்வை தூண்டுவதாகவும் உள்ளது. இவ்வாறான செயல்கள் IPC பிரிவுகள் 153A மற்றும் 153B இன் கீழ் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும்.

  அனைத்து மாவட்ட நடுவர்களும், தங்கள் கடமைகளைத் சட்டப்படி செய்யத் தவறி, இந்திய ஒன்றியத்தின் சட்டங்கள் மற்றும் அரசமைப்பு சாசனத்தை மீறி செயல்பட்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது

  ReplyDelete
 3. 😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂🥺🥺🥺🥺☹️☹️🧐😕😟😟😟😕😕

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி