Flash News : DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2022

Flash News : DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு.

 

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  28 .1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.


தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.




21 comments:

  1. மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  2. இதற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்.🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  3. Kalvidurai waste onnumae illada visayam inda asingam thevaiya plan pannungapa

    ReplyDelete
  4. காத்திருப்பு போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற TNPGTA சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. போராடி வெற்றி பெற்ற சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  6. இரவு பகலாக உழைத்த உள்ளங்களுக்கு
    உங்கள் பாதம் பணிந்து நன்றி

    ReplyDelete
  7. Counselling பிறகு 2% பிரச்சனைக்கு case போட்டு stay வாங்கியிருக்கலாம்.All teacher க்கும் இப்படி counselling ல பிரச்சனை கிளப்பி விட்டாச்சு. ....

    ReplyDelete
  8. Counselling உடனடியாக நடத்துங்க sir. இதெல்லாம் சீக்கிரம் சரி பண்ண முடியும் உங்களால். Pls

    ReplyDelete
  9. 5 வருஷமா காத்துக்கிட்டு இருக்கோம். Counselling சீக்கிரம் நடத்துங்க. முடியல.... இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி அலகழிப்பிங்க? எந்த டிபார்ட்மெண்ட் லயும் இப்படி நடக்காது .

    ReplyDelete
  10. அனைத்து ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு விட்டனர்.இனி கலந்தாய்வு என்பது கானல் நீரே!பல ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் வெளிப்படைத்தன்மையோடு கலந்தாய்வு நடைபெற்றது.அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது.நாம்தான் வழக்கு தொடுத்து வீணாக்கிவிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. அரசு நினைத்தால் எல்லாம் சாத்தியமே.... நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்...காத்துக்கொண்டு இருக்கின்றோம்

      Delete
  11. வழக்கு தொடுத்தது ஆசிரியர்கள் அல்ல

    ReplyDelete
  12. பகுதி நேர ஆசிரியரை "பணி நிரந்தரம்"செய்ய சொல்லுங்க.முதல்வர் மு.க ஸ்டாலின் 2016 மில் ஆச்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் கலைஞர் கொடுத்தார்.இப்பொழுது (திமுக) தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறது.ஆனால் வாக்குறுதியை காப்பாற்ற வில்லை.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தால்.இதை நிறைவேற்ற சொல்லுங்கள்.10 வருடம் கடந்து விட்டோம்."இறைவன்" பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்😭😭😭😭😢😢😢😔😔😔😷😷😷😷

    ReplyDelete
  13. வழக்கு தொடுத்தது யார்?

    ReplyDelete
  14. Counselling yeppo நடத்துவிங்க

    ReplyDelete
  15. PG transfer counselling சீக்கிரம் நடத்துங்க sir, travelling romba கஷ்டமாக இருக்கு , 5 years ku mela கஷ்டப்பட்டு கொண்டு இருக்கோம். சொந்த மாவட்டம் போகனும் nu pala வருடமா try பண்ணிக்கொண்டு உள்ளேன். இன்னும் நடக்கவில்லை, இந்த வருஷம் போய்டலாம் nu நினைச்சேன், இன்னும் இழுத்துக்கிட்டு இருக்கு., சீக்கிரம் announce pànnunga sir..

    ReplyDelete
  16. அனைவருக்கும் வணக்கம்,
    சிறு சிறு மாற்றம் அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை கொண்டு வரும்.
    தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதலில், பட்டதாரி ஆசிரியரின்
    காலி பணியிடத்தை நிரப்புவதற்கு முதலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தன் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
    பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமா?
    சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடமும் உள்ளது ஆனால் சென்று பணியாற்ற வாய்ப்பு நடைமுறையில்?
    நடை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வாருங்கள். பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் தன் சொந்தங்களோடு இருக்கவும், சொந்த மாவட்ட பள்ளிகளில் வேலை செய்யவும் வழிவகை செய்து தரும்படி தொடக்கக் கல்வித்துறையை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி