பொது மாறுதல் கலந்தாய்வில் Need Post காண்பிக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 23, 2022

பொது மாறுதல் கலந்தாய்வில் Need Post காண்பிக்க கோரிக்கை!


கூடுதல் தேவை Need Post பணியிடங்களைக் பொது மாறுதல் கலந்தாய்வில் அனைவரும் மாறுதலில் செல்லும் வகையில் காலிப் பணியிடமாக அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் கூட்டணி தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வலியுறுத்தல்.


Kootani Request Letter - Download here...

10 comments:

 1. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

  ReplyDelete
 2. மனசாட்சி இல்லா மனிதர்கள் .
  இவர்களால் அனைவருக்கும் பாதிப்பு.
  எங்கள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது..
  5 வருஷமா கஷ்டப் படுரோம். உனக்கு 1 வருஷத்துல counseling la கலந்துக்க முடியலன்னு case போட்டு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கஷ்டப் படுத்துறீங்க .
  அதையும் இந்த govt எடுத்துக்கிட்டு, கவுன்சிலிங் தள்ளி வச்சிருக்கு... இது தான் நியாயமா? அப்போ இவ்வளவு நாள் இதற்காக காத்துகொண்டிருக்கும் நாங்கள் என்ன செய்வது? இனியும் பொறுமை காக்க முடியாது . அரசு உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. தயவுசெய்து முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி உடனே அறிவியுங்கள்

  ReplyDelete
 4. முக்கிய செய்தி: அநீதியை வென்றெடுப்போம். பட்டதாரி ஆசிரியர்களின் ஒருமித்த கருத்துக்களோடு கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். (நல்ல முடிவை எதிர்பார்த்து). பட்டதாரி ஆசிரியர் சங்கங்களில் உள்ளஅனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம். பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படும் அநீதிகள் யாவன. 1.பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ளே நுழையும், பதவி உயர்வு மூலம் சென்ற முதுகலை ஆசிரியர்கள் பணிமாறுதல் பெறுவது, அதாவது 15,000 பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 95% பேர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெறுகின்றனர். ஆனால் 60,000 பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து வெறும் 5% பேர் மட்டுமே உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வருங்காலத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி என்பது கானல்நீராக தோன்றும் என்பதை ஒவ்வொரு சங்கமும் நினைவில்கொண்டு வேறுபாடின்றி போராடி வெற்றிபெற அனைவரும் பாடுபடுவோம். அடுத்து அலுவலக பணியாளராக பணிபுரிந்து, 2% முதுகலை ஆசிரியராக (கற்பித்தல் அனுபவம் இன்றி) பணிமாறுதல் பெறுவது, அடுத்ததாக தொடக்கக்கல்வித் துறையில் வட்டராகக் கல்வி அலுவலராக (BEO) பணிபுரிந்து 3% உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவது, இது போன்ற கண்ணுக்கு தெரிந்தே நமது (பதவிகளை) உரிமைகளை பறிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்.இந்த அநீதிகளை வென்றெடுக்கும் வகையில் சில சங்கங்களும் முயற்ச்சிகள் மேற்கொண்டு நீதிமன்றங்களை நாடி போராடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற சங்கங்களும் ஒன்றிணைந்து கருத்துவேறுபாடின்றி போராட வேண்டுகிறோம்.
  இது எந்தவிதத்தில் நியாயம் என்றுதெரியவில்லை. பதவி ஆசை ஒன்றுதான் காரணம் இதை அடியோடு வேரறுப்போம். சென்ற ஆண்டு 2021ல் அரசாங்கத்தால் நடத்தப்பட்டத் துறைத் தேர்வு Test code:65, தாள் .1-இல் கேட்கப்பட்ட கேள்வியில் கூட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, ஊட்டு பதவி எதுவென்றால், பட்டதாரி ஆசிரியர் பதவியே. மேற்காண் அநீதிகளை புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வெற்றிகாண்பது மற்றொன்று அனைத்து சங்கங்களும் ஒரு மித்த கருத்தோடு வேறுபாடு பார்க்காமல், நீதிமன்றம் மூலமாக போராடி பட்டதாரி ஆசிரியர்களுக்கேஉரிய பதவி உயர்வுகளை வென்றெடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பதவி உயர்வில் அநீதி வெல்கிறது இதை வேரோடு அழிப்போம். இதற்காக அனைத்து ஒத்துழைப்புக்களையும் கொடுப்போம். போராடுவோம்''! வெற்றிப் பெறுவோம்.!! அடுத்த சந்ததியர்களுக்காக (பட்டதாரி ஆசிரியர்கள்) முழு நம்பிக்கையுடன்.!! நன்றி! வணக்கம் ||🙏🙏🙏💪💪💪👍👍👍

  ReplyDelete
 5. 2%pg teacher one year norms issue ஏன் case போட்டு vacat பன்னகூடாது. ..சங்கமும் பள்ளி கல்விதுறையும் ஏன் இந்த மவுன விரதம்?

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே drama dhan. May month வரை இழுத்தடிக்கணும் nu முடிவு பண்ணிட்டாங்க.அதான்.

   Delete
 6. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

  ReplyDelete
 7. Velai illathavanukku velai venum velai irukavanukku veetu pakkathula and promotion ellame venum kodumai

  ReplyDelete
  Replies
  1. நீ வேலைக்கு வந்தாலும் இத தானே நினைப்பே? முண்டம். இல்ல வேலை கிடைச்சா போதும் nu usura koduthudviyaa? சுவர் இருந்தா தான் சித்திரம் பண்ணாட

   Delete
  2. Nee Tet pass candidate dhane? அதான் வயித்தெரிச்சல் .நல்லதே நினை நல்லதே நடக்கும் ok

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி