PGTRB - முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 12ம் தேதி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2022

PGTRB - முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 12ம் தேதி துவக்கம்.

 

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். வரும், 12ம் தேதி முதல் 180 மையங்களில் கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது.


மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பதவிகளில் காலியாக உள்ள, 2,207 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்துகிறது. வரும், 12ம் தேதி முதல் 20 வரை, பாட வாரியாக, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுதும், 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 200 மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரலை காட்சி பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு குறித்த விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

21 comments:

 1. Naan Vellore enaku exam centre Chennai la poatirukanga, ippadi exam centre poatirukanga,so please avanga avanga district layae exam centre poadunga please

  ReplyDelete
  Replies
  1. உங்க டிஸ்ட்ரிக்ட்ல சென்டர் போட்டா நிம்மதியா பரீட்சை எழுதி நீங்க செலக்ட் ஆகவா?! இப்ப இருந்தே உங்கள வெறுப்பேத்தனா தான் உள்ள கொண்டு வரவேண்டியவன் உள்ள கொண்டு வர முடியும்.

   Delete
 2. I am from Thiruvallur dist. My centre is in Thanjavur Dist...

  ReplyDelete
  Replies
  1. இது எவ்ளோ பரவா இல்ல... நம்ம ஆளு ஒருத்தவனுக்கு ஹாங்காங் வந்து இருக்கு...
   பயபுள்ள native நார்த் கொரியா போல...

   Delete
 3. I am hosur my centre vellore exam time morning please consider our problem

  ReplyDelete
 4. Trichy district candidate ku thiruvarur district la exam... soopper

  ReplyDelete
 5. Iam also enakku imayamalai pottrukkanga

  ReplyDelete
 6. பரதேசி TRB நாமக்கல்காரனுக்கு கோவை போட்டு இருக்கானுங்க..

  நாய்களா கேரளா போட வேண்டியது தானே??

  ReplyDelete
 7. இந்த அரசில் பள்ளிக்கல்வித்துறை குழப்ப துறையாக உள்ளது.சரியான முடிவுகள் இல்லை.

  ReplyDelete
 8. அனைவரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கியுங்கள்.....

  ReplyDelete
 9. முதலில் ஊசி பிறகு தேர்வை பற்றி யோசி

  ReplyDelete
 10. என்ன இந்த அதிகாரிகள் பண்றது

  ReplyDelete
 11. போட்டித் தேர்வினை முறைகேடுகள் இன்றி நடத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை இதற்காக தேர்வர்களை 300 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள மையத்திற்கு ஒதுக்கீடு செய்தும் தேர்வு நாள் அன்று காலை 7-30 மணிக்கு வரச்சொல்வது எந்த வித த்தில் நியாயம் என்பது புரியவில்லை பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால் தேர்வு வாரியம் தேர்வர்களுக்கான தேர்வு மையத்தினை அந்தந்த மாவட்டத்தில் ஒதுக்க வேண்டும்

  ReplyDelete
 12. ஐயா, வணக்கம்,


  முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு மிக நீண்ட தொலைவில் தேர்வெழுதும் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதனால் தேர்வர்கள் பல மாவட்டங்கள் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் கடும் சிரமத்துக்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

  கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் தேர்வின் போதே பல தேர்வர்களுக்கு பல மாவட்டங்கள் தாண்டி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தேர்வர்களின் புகார் குறித்து பரிசீலித்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தேர்வர்கள் நலன் கருதி அருகாமையில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி தேர்வு மையம் அருகாமையில் ஒதுக்கப்பட்டு தேர்வு புதிய அட்டவணைப்படி நடைபெற்றது.

  தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு (PGTRB) எழுதும் தேர்வர்களுக்கும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது.
  மிக நீண்ட தொலைவில் தேர்வெழுதும் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இது மட்டுமல்லாமல் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது RTPCR சோதனை எடுத்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து தேர்வு அறிவிப்பு வெளியிடும் போதே ஆணையம் ஏதும் குறிப்பிடவில்லை.

  தற்போது நடைபெறும் TNPSC தேர்வுகள், CSIR NET, GATE, தேர்வுகள் போன்ற தேர்வுகளிலேயே தடுப்பூசி சான்றோ, கொரோனா பரிசோதனை சான்றோ கேட்பதில்லை. TRB மட்டும் இவ்வாறு கடைசி நேரத்தில் கேட்பது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

  உடனடி கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டுமெனில் தனியார் பரிசோதனை மையங்களையே நாட வேண்டியுள்ளது. கட்டணமும் அதிகம்.

  இது மட்டுமில்லாமல் காலை தேர்வுக்கு 8:15 மணிக்குள்ளாகவும், மதிய தேர்வுக்கு மதியம் 1:15 மணிக்குள்ளாகவும் வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நீண்ட தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள தேர்வர்கள் முதல் நாளே சென்று தங்கினால் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையே உள்ளது.

  இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கும், சிரமத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

  ஆகவே ஐயா அவர்கள் தேர்வர்கள் நலன் கருதி மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் ஏற்கனவே உறுதியளித்தபடி இனிவரும் காலங்களில் TRB தேர்வுகள் தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்பதை உறுதிபடுத்துமாறும், தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கி தேர்வர்களின் சிரமத்தை நிவர்த்தி செய்திடுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

  தேர்வர்கள் நலன் கருதி...


  இதை பின்வரும் Email id களுக்கு அனுப்பிவைக்கவும்...


  cmo@tn.gov.in

  cmcell@tn.gov.in

  cs@tn.gov.in

  minister_hredu@tn.gov.in

  minister_schedu@tn.gov.in

  hrsec@tn.gov.in


  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
  அனைவரும் அனைத்து மெயில் id க்கும் அனுப்புங்கள்
  நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்

  👍👍👍

  ReplyDelete
  Replies
  1. இவ்ளோ பெரிய கட்டுரை தேவை இல்லை ... Survival of the fittest ன்னு ஒரு கொள்கை... நாம எக்ஸாம் போகல அதனால நாம செலக்ட் ஆகலனு நெனைக்கறோம் but யார் உள்ள போறாங்கனு புரிஞ்சவங்க தான் பிஸ்தா... யாரையும் blame பண்ணாதீங்க ... இருக்கறவன் வாங்குவான் இல்லாதவன் ஏங்குவான்.... அறிவு / செல்வம்... அவ்ளோ தான் ... ஜெய் ஹிந்த் 🙏

   Delete
 13. இந்த தேர்வு தேர்வர்களின் எதிர்கால நலன் கருதிய தேர்வா அல்லது உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்கான தேர்வா என்று புரியவில்லை எல்லா பணிகளும் மிக வேகமாக நடக்கிறது மார்ச் மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா வந்துவிடுமோ என்று தெரியலை கல்வித்தரம் மிக மிக கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது இவ்வாறு எல்லோரையும் சிரமப்படுத்துவதற்கு பழைய தேர்வு முறையான OMR SHEET முறையே இருந்திருந்தால் அந்ததந்த மாவட்டத்தில் எல்லாரும் எவ்வித பதட்டமின்றி தேர்வெழுதுவார்கள் பார்ப்போம் இந்த தேர்வு நடக்குமா தள்ளிப்போகுமா என்று

  ReplyDelete
 14. நேற்று மாவட்ட ஒதுக்கீடு வரவேண்டிய பொருளியல், விலங்கியல் , தாவரவியல் போன்ற பாடங்களுக்கு இதுவரை மாவட்ட ஒதுக்கீடு வெளியிடவில்லை

  ReplyDelete
 15. Enagu kanyakumari very long distance Kerala potu irunthal other states agirukum

  ReplyDelete
 16. தமிழ் exam க்கு district இல் எந்த இடம் எங்கே என்ற admit card வந்துவிட்டதா ஃப்ரெண்ட்ஸ்.tq

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி