உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2022

உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு  ரூ2000  பரிசு அறிவிப்பு SPD செயல்முறைகள்


 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி செய்துணர் கற்றல் திட்டத்தின் கீழ் , மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ( Quiz Competition ) நடத்துவதற்காக , இடைநிலையில் , 6177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றுக்கு ரூ . 500 / - வீதம் 30.885 இலட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு , அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும் வகையில் , இணையதள வழியாக ( Hi - Tech Lab வாயிலாக ) ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான பதிலைத் தெரிவு செய்யும் விதமாக 30 வினாக்கள் கொண்ட Basic Quiz நடத்தப்பட்டது


வினாக்கள் அனைத்தும் SCERT- ஆல் தயாரிக்கப்பட்டு EMIS வாயிலாக போட்டிகள் நடத்தப்பட்டது . மேற்காண் Basic Quiz செயல்பாட்டில் கலந்துகொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் , ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 1,480 மாணவர்களின் விவரம் ( ஒரு மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் 37 மாவட்டங்களுக்கு ) EMIS வாயிலாக பெறப்பட்டுள்ளது . இந்நிலையில் , தெரிவு செய்யப்பட்டுள்ள 1,480 மாணவர்களையும் ஊக்கப்படுத்தவும் , மேலும் கற்றலின்மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் , அவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் மாணவர் ஒருவருக்கு ரூ .2000 / - வீதம் மொத்தம் ரூ .29,60,000 / - நிதி இணைப்பில் உள்ளவாறு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.







No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி