தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2022

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...?

 

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...?? 


மலை சுழற்சியால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மலை சுழற்சி அரசாணை-404 தொடக்கக் கல்வித் துறையில் தொடரும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தனர்.


தமிழக அரசு தடையை நீக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. எனவே இன்னும் சில நாட்களில் மலை சுழற்சி தடையை முறையாக நீதிமன்றத்தில் நீங்கும் என்றும் ,மாவட்ட மாறுதல் கண்டிப்பாக நடைபெறும் என தெரிகின்றது. 


மழை சுழற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் (மலை சுழற்சி உள்ள மாவட்டங்களில்) மற்றும் மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற தடை நீங்கியவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறும் இது குறித்து பல்வேறு குழுக்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இத் தகவல் பகிரப்பட்டுள்ளது. 


தகவல் பகிர்வு: மாநில தலைமை 

SSTA-2009& TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி