27.03.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் குறிப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2022

27.03.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் குறிப்புகள்!

 


1) இன்றைய உலகம்____ஐ பெரிதும் விரும்புகிறது?

அ) முடியாட்சி 
ஆ) குடியரசு 
இ) மக்களாட்சி
ஈ) குடியாட்சி 

2) உயர்குடியாட்சி நாடுகளுக்கு எடுத்துக்காட்டு______

அ) வடகொரியா, சவூதி அரேபியா
ஆ) இங்கிலாந்து, ஸ்பெயின் 
இ) பூடான், ஓமன், கத்தார்
ஈ) சீனா, வெனிசுலா 

3) ஒரு நபர் (வழக்கமாக அரசர்) ஆல் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) முடியாட்சி 
ஆ) குடியரசு
இ) மக்களாட்சி
ஈ) குடியாட்சி 

4) சிறு குழு ஆட்சி நாடுகளுக்கு எடுத்துக்காட்டு_____

அ) வடகொரியா, சவுதி அரேபியா 
ஆ) இங்கிலாந்து, ஸ்பெயின்
இ) பூடான், ஓமன், கத்தார்
ஈ) சீனா, வெனிசுலா

5) முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) முடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) தனிநபர் ஆட்சி
ஈ) குடியாட்சி

6) பொருத்துக.

அ) முடியாட்சி-பூடான், ஓமன் கத்தார் 
ஆ) தனிநபர் ஆட்சி-வடகொரியா, சவுதி அரேபியா 
இ) மதகுருமார்கள் ஆட்சி- வாட்டிகன்
ஈ) மக்களாட்சி- இந்தியா,USA, பிரான்ஸ்
 உ) குடியரசு- இந்தியா, ஆஸ்திரேலியா

7) MONARCHY-இதன் தமிழாக்கம் என்ன?

அ) உயர்குடியாட்சி
ஆ) முடியாட்சி
இ) தனிநபர் ஆட்சி 
ஈ) சிறுகுழு ஆட்சி 

8) AUTOCRACY-இதன் தமிழாக்கம் என்ன?

அ) உயர்குடியாட்சி
ஆ) முடியாட்சி 
இ) தனிநபர் ஆட்சி
ஈ) சிறுகுழு ஆட்சி

9) மக்களாட்சி- இதன் ஆங்கில சொல் என்ன?

அ)  Republic
ஆ) Democracy
இ) Theocracy
ஈ) Aristocracy

10) பொருத்துக.

அ) Republic- குடியாட்சி
ஆ) Oligarchy- சிறுகுழு ஆட்சி
இ) Theocracy- மதகுருமார்கள் ஆட்சி
ஈ) Aristocracy- உயர்குடியாட்சி

11) மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அல்லது அமைப்பையோ கட்டுப்படுத்துவது_____ எனப்படும்?

அ) உயர்குடியாட்சி
ஆ) மக்களாட்சி
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியாட்சி

12)  ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்கள் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) உயர்குடியாட்சி
ஆ) மக்களாட்சி 
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியாட்சி 

13) குடியரசு எனும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

அ) சீனா 
ஆ) எகிப்து
இ) ஆஸ்திரியா 
ஈ) ரோம் 

14)குடியரசு என்னும் சொல் எப்போது வடிவமைக்கப்பட்டது?

அ) கி.மு. 400 
ஆ) கி.பி. 500
இ) கி.மு. 500
ஈ) கி.பி. 400 

15) குடியரசு எனும் சொல் Res publica எனும்____ மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) ஆஸ்திரிய 
ஆ) இலத்தீன் 
இ) பாரசீகம் 
ஈ) கிரேக்க

16)  இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) 1949, டிசம்பர் 26
ஆ) 1950, அக்டோபர் 26
இ) 1949, நவம்பர் 26
ஈ) 1950, ஜனவரி 26 

17) இந்திய அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது?

அ) 1949, டிசம்பர் 26
ஆ) 1950, அக்டோபர் 26
இ) 1949, நவம்பர் 26
ஈ) 1950, ஜனவரி 26 

18) res publica -இதன் பொருள் என்ன?

அ) பொது விவகாரம்
ஆ) மக்களின் அரசாங்கம்
இ) மக்கள் அதிகாரம்
ஈ) மக்களாட்சி

19)  மக்களாட்சி (DEMOCRACY) எனும் சொல்____ மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) ஆஸ்திரிய
ஆ) லத்தின் 
இ) பாரசீகம் 
ஈ) கிரேக்க

20) Democracy இதன் பொருள் என்ன?

அ) பொது விவகாரம்
ஆ) மக்களின் அரசாங்கம்
இ) மக்கள் அதிகாரம்
ஈ) குடியரசு 

21) Democracy என்னும் சொல் ____லிருந்து பெறப்பட்டது?

அ) demos
ஆ) cratia
இ) demo
ஈ) cratiah

22) 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி தோன்றிய நாடு?

அ) கிரேக்கம்
ஆ) பாரசீகம் 
இ) எகிப்து 
ஈ) ஏதென்ஸ்

23) மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என குறிப்பிடுபவர்?

அ) ஜவஹர்லால் நேரு
ஆ) காந்தியடிகள்
இ) சாணக்கியர் 
ஈ) ஆபிரகாம் லிங்கன் 

24) "ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்தப்படுவதாகும்"என கூறியவர் யார்?

அ) ஜவகர்லால் நேரு
ஆ) காந்தியடிகள்
இ) சாணக்கியர்
ஈ) ஆபிரகாம் லிங்கன்

25) நாடாளுமன்ற அரசாங்க மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?

அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்
ஆ) இந்தியா, இங்கிலாந்து
இ) பிரான்ஸ், இங்கிலாந்து
ஈ) இந்தியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

ஆயக்குடி 
இலவச பயிற்சி மையத்தின் குறிப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வெழுத


1 comment:

  1. RASI TRB ACADEMY
    NAMAKKAL

    UG TRB ENGLISH COACHING CLASS
    ONLINE CLASS & OFFLINE CLASS AVAILABLE
    CONTACT:9865315131 \9043732201

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி