இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2022

இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு!

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதலுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், பிப்ரவரியில் துவங்கியது. முதற்கட்டமாக, 'எமிஸ்' என்ற பள்ளி கல்வி மேலாண்மை தளத்தை பயன்படுத்தி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த தளத்தில் ஆசிரியர்களின் தகவல்களை பதிவு செய்வது மற்றும் அவற்றை பார்ப்பதில், ஏராளமான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.


இதையடுத்து, தனித்தனியே தினமும் காலியிடங்களை பதிவு செய்து, அந்த பட்டியலின்படி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதனால், கவுன்சிலிங் தாமதமாக நடந்து வருகிறது. கடந்த வாரமே கவுன்சிலிங் முடியவிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கவுன்சிலிங் இன்னும் முடியவில்லை.இறுதி கட்ட கவுன்சிலிங் இன்று காலை 8:30 மணிக்கு துவங்க உள்ளது. இதில், 6,000 பட்டதாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மூன்று நாட்களில் கவுன்சிலிங் முடிய வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

5 comments:

 1. இன்னும் மூன்று நாட்களா?தயவு செயது எவ்வளவு பேர் வரவேண்டும் என்பதை முன்கூட்டியே சொன்னால் மீதமுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வார்கள்.ஏன் இப்படி கடுமையான மனஉளைச்சலை தருகிறீர்கள்?

  ReplyDelete
 2. Ok but when Elementary School secondary grade teacher's and BTs District to District transfer will happen, we are all waiting for long time with lots of family medical problems and mental agony. Request all concerned that kindly do the needful at the earliest. Thanks.

  ReplyDelete
 3. இன்றைய நிலையில் இருக்கும் காலி பணி மற்றும் தர வரிசை பதிவிட வேண்டும்

  ReplyDelete
 4. Unknown
  March 20, 2022 at 7:40 AM
  என் ஆசிரிய சொந்தங்களே மற்றும் அனைத்து நிலை ஆசிரிய சங்க பிரதிநிதிகளுக்கு தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிவாக வணக்கங்கள், நாங்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நிலை உள்ளது....தற்பொழுது நாங்கள் சொந்த மாவட்டம் செல்ல சாதகமான சுழல் உள்ளது...எனவே தொடக்கப்பள்ளி கலந்தாய்வை உடனடியாக நடத்த வலிவுருத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...குடும்பத்தை, பிள்ளைகளை பிரிந்து மிகவும் சிரம படுகிறோம்...உதவி செய்யுங்கள் சொந்தங்களே...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி