பள்ளி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2022

பள்ளி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவு.

 

அரசு பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வி துறையின் கீழ், பல கோடி ரூபாய் செலவில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. பள்ளிக்கே தொடர்பில்லாத 'இல்லம் தேடி கல்வி' திட்டம்; பள்ளி நிர்வாக பணியை, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப திட்டம்; பள்ளிக்கு வெளியே வழிகாட்டும், 'நான் முதல்வன்' என பல திட்டங்கள் உள்ளன.


ஆனால், மாணவர்களின் கற்பித்தல் சார்ந்தும், ஒழுக்க நெறியை பேணும் வகையிலும், ஆரோக்கியமான திட்டங்கள் வரவில்லை என, குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, மாணவர்களை ஒழுங்குபடுத்த, நல்வழி காட்ட, உளவியல் ஆலோசகர்கள் நியமிக்க கூட, நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது.


இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் சிலர், பஸ் படிக்கட்டில் ஆட்டம் போடுவது, உள்ளூர் ரயில்களில் சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாணவியர் புகை பிடிக்கும் சம்பவங்களும்நடக்கின்றன.இதன் உச்சகட்டமாக, தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் படிக்கும், பிளஸ் 1 மாணவர் ஒருவர், ஆசிரியரிடம் கத்தியை காட்டி ரகளை செய்தார். 


தட்டிக் கேட்ட ஆசிரியர்களிடம், 'ஏறினா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா பெயிலு' என்று திமிராக பேசியதும், சமூக வலைதளத்தில் வெளியானது.இதையடுத்து, பணி பாதுகாப்பு வேண்டும் என, தேனி முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மனு அளித்தனர். தற்போது, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை கண்காணித்து, அநாகரிக செயலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பாளர்களை நியமிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


பள்ளிக்கல்வி துறை நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் அமுதவல்லி, பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கையில், 'பஸ்கள் மற்றும் பிற இடங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை கண்காணித்து, உரிய உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். 'அவர்களின் பெற்றோரை அழைத்து, எச்சரிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

8 comments:

  1. டேய் தமாஷ் பண்ணாதீங்க போங்கடா

    ReplyDelete
  2. ஐயா மலை சுழற்சி ஒன்றியம் தவிர்த்து மற்ற ஒன்றியங்கள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை நடத்துங்கள் மேலும் மலை சுழற்சி வழக்கு முடிந்தவுடன் மேலும் ஒரு மாவட்ட கலந்தாய்வு நடத்தினால் அங்குள்ள ஆசிரியர்களும் பாதிக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து...விரைந்து நடவடிக்கை எடுங்கள்.....பல சிக்கல்களுக்கு ஆலகியுள்ளோம்.....இரக்கத்துடன் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள் அய்யா...நன்றி

    ReplyDelete
  3. பள்ளிக்கல்வி துறையில் தேவை இல்லாத திட்டங்கள் கொண்டு வருவதை விடுத்து மாணவர்கள் ஒழுக்கத்துடன்(முந்தைய காலங்கள் போல) கல்வி பயில நல்ல பல திட்டங்களை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.இதுமிக அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை மிக மிக அருமை

      Delete
  4. ஒழுக்கம் என்பது உயிரைவிட மேலானது என்று மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் உணரும் வரையில் வகையில் அரசாங்கம் மற்றும் சமூக ஊடகங்கள் பல சேவைகளை தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். யாருக்கும் பயன் பெறாத பலவற்றிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மாணவ மாணவிகளுக்கு கொடுத்தால் மிகச் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும்.

    ReplyDelete
  5. First you censor the films properly, that is the first enemy for society. Actors are spoiling the future generations.

    ReplyDelete
  6. முதலில் கல்விமுறையில் மாற்றம் செய்து மனிதனை உருவாக்கும் மதிப்பு உணர்வு கல்வியை தாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி