பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வி துறை அனுமதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2022

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வி துறை அனுமதி!

 

அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.



தினமலர், தந்தி TV செய்தி - view here



 தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டனர்.


இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதை தாமதமாக அறிந்த, பள்ளிக்கல்வி துறை, தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.


இதன்படி, மாநிலம் முழுதும் 2,774 முதுநிலை ஆசிரியர்களை, தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் பாடங்களுக்கு, ஐந்து மாதங்களுக்கு மட்டும், தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வி துறையின் மேல்நிலை பள்ளி இணை இயக்குனர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.பொது தேர்வு நெருங்கும் நிலையில், இது தாமதமான முடிவு என்று, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

24 comments:

  1. சோளமுத்தா போச்சா டேய் டேய்

    ReplyDelete
  2. உண்மை நண்பரே அஇஅதிமுக ஆட்சியும் திமுக ஆட்சியும் ஆசிரியகள் நியமனத்தில் ஒரே மனநிலையில் தான் உள்ளது

    ReplyDelete
  3. இது 5மாதங்களுக்கு முன்பே வந்த அறிவிப்பு...கலந்தாய்வு பதவி உயர்வின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன் தற்காலிகக் பணியாளர்களுக்கு பணிவிடுப்புக் கொடுத்தாயிற்று...நான் இந்த பணியிடங்களில் தான் பணிபுரிந்து வந்தேன் தற்போது அந்தஇடங்கறுக்கு பதவிஉயர்வு பணிமாறுதலில் ஆசிரியர்கற் வந்து விட்டார்கள் கல்விச்செய்தி தவறான செய்தி வெளியிடுகிறது.. இயக்குநரின் செயல்முறைக்கடிதத்துடன் வெளியிடவும்....இது ததவறான தகவல்

    ReplyDelete
  4. Replies
    1. One month முடிய போகுது இன்னும் salary podala

      Delete
  5. தவறான செய்திகள் வெளியிடும் கல்விச் செய்தி நிர்வாகம் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம்.இது 26.11.2021 அன்று வெளியிடப்பட்ட பழைய செய்தி.

    ReplyDelete
  6. Replies
    1. இது தந்தி டிவியில்வந்தது புதிய செய்திதான்

      Delete
  7. இருக்கறவங்களுக்கு வேலை தர முடியல.10 பகுதி நேர ஆசிரியராக பணி புரியும் எங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் "பணி நிரந்தரம்" செய்ய முடியல.இதுல வேற தற்காலிக ஆசிரியர நியமிக்க போறாகலாம்.அவர்களும் மனிதர்கள்தான் நிரந்தரம் செய்ய‌ சொல்லி "போராட்டம்" பண்ண மாட்டாங்கனு என்ன நெச்சியம்.🙄🙄🙄🙄🙄😷😷😷😷😷

    ReplyDelete
    Replies
    1. Ungala ottumothama thooka porangalaam patthirikkai seithi pakalaya

      Delete
  8. 10 வருடம் பகுதி நேர ஆசிரியராக இருக்கும் எங்களை "பணி நிரந்தரம்" செய்யுங்கள்.🙄🙄🙄🙄🙄😷😷😷😷😷🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Aragara Govinda ...narayana indha kosu tholai thanga mudiyula da

      Delete
    2. Nee yaruda naye..oh velaiya pathutu po

      Delete
  9. கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete
  10. Trt maths best coching centre in Madurai?

    ReplyDelete
  11. Yenna miruku da sudalai exam nadaturinka

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா சங்கி நீ என்ன ஆசிரியர் பதவிக்கு தகுதியானவனா..பிடிக்குதோ பிடிக்கலையோ அவர் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்...
      அரசை நோக்கிக் கேட்கும் கேள்வியில் நாகரிகம் வேண்டாமா...நீயெல்லாம் ஆசிரியராகப் போய் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கத்துக்குடுப்பியா..இல்லை கையில் அருவாளைக் கொடுப்பியா....நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தால் இந்த வார்த்தைகள் வராது..ஆண்டவன் படைப்பில் நீ ஒருஈனப்பிறப்பு இழிபிறப்பு

      Delete
    2. ங்கிப்பயலுக்கு குண்டி எரியுது சகோ..ஐஸ்டியூப் சொருக்கடா முண்டம்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி