பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், 24 மணி நேரத்திற்குள் 6 கேள்விகளுக்கு பதிலளிக்க அப்பள்ளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (மார்ச் 28) காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர் தீக்சித்தின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவரின் உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வழி வகை செய்ய வேண்டும்..... கனடா போல
ReplyDeleteஅப்போதுதான் இது போன்ற நிகழ்வு நடக்கும் பட்சத்தில் பெற்றோர்களுக்கு நற் தீர்வு எட்டும்....
ReplyDeletePrincipal and correspondent must be punished along with driver.
ReplyDelete