அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2022

அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை!

 

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


காலிப்பணியிடங்கள்:


தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறையாத நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் நடைபெற்று வந்தது. அதனால் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இந்த நேரத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.


அதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. குறிப்பாக அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப போதிய ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.


இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசை வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வு இல்லாமல் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வழங்கியுள்ளார்.

7 comments:

  1. அரசு உதவி பெறும் அனைத்து வகை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களைநிரப்புவதற்கு அரசு மறுப்பதேன்.

    ReplyDelete
  2. Adhellam nadakave nadakadhu.... Ooty conventukkum ulloor middle school kum ulla verupaaadu,.

    ReplyDelete
  3. S.same question.why govt not permitted to aided school.govt not given job.aided also not permitted.what can do tet passed candidates....

    ReplyDelete
  4. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிவாய்ப்பு மறுக்கபடுகிறது . தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது

    ReplyDelete
    Replies
    1. Enna case sir I want ur number to clarify some doubts

      Delete
  5. தமிழக அரசு தொடர்ந்து வழக்கு பதிந்து பணி நியமனம் நடைபெறாமல் இருக்க முழு மூச்சாக செயல்படுகிறது

    ReplyDelete
  6. பள்ளிகளில் சிறப்பாசிறியர்கள் நியமனத்தில் டி.டி.சி ஒவியம்;இசை;தையல் படித்தவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படுவதுபோல் டி.டி.சி (விவசாயம்) படித்தவர்களுக்கும் பணி நியமனம் வழங்க அரசுக்கு குரல் கொடுக்க வேனுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி🙏.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி