வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற்றது... வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 3, 2022

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற்றது... வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது!

 

தெற்கு வங்ககடலின் மத்திய கிழக்கு மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருந்தது. அதன் படி, இன்று காலை வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.


மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 760 கீ.மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 950 கீ.மீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் அது இலங்கை கடற்பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து காற்றழுத்தம் தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் வரும் 4ந் தேதி அதிகனமழை பெய்ய என்று கூறி சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி