புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2022

புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம்

 

புதிய கல்வி கொள்கைப்படி திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கூடுத லாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இதுவரை பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும்.

இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 10ம் வகுப்புக்கு மே 21; பிளஸ் 2க்கு மே 28ம் தேதி திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


புதிய கல்வி கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்கள் மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளில் இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ளன.


'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம்' என அரசு அறிவித்தாலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கி உள்ளன.

6 comments:

  1. தமிழ் நாட்டில் தேர்வு சமயத்தில் திடீரென்று அனைத்து 10, 12 தேர்வர்களும் திறன் வளர்ப்பு அடிப்படையிலான தொழிற்கல்வி தேர்வு எழுத வேண்டும் என அறிவித்து இருப்பது ஏன்?. தொழிற்கல்வியைப் பற்றி 15-18 வயதிலேயே அறிந்துகொள்வது நல்லது தான். ஆனால் ஒன்றிய அரசின் புதியக்கல்வி புகுத்திய தொழிற்கல்வியின் நோக்கம் பல ஐயப்பாடுகளைக் கொண்டுள்ளதே. தமிழ்நாட்டில் புதியக்கல்வி முறை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் பொதுத் தேர்வவோடு இது சேர்க்கப்பட்டது ஏன்? இந்தப் புதுத் தேர்வு குறித்து மாணவர்களிடையே அச்சம் நிகழாதா? அக்னி வெயிலில் நடக்கும் தேர்வுகளோடு இது இன்னும் வெப்பத்தைக் கூட்டாதா?

    ReplyDelete
    Replies
    1. பிஜேபி =திமுக இரண்டும் ஓன்று தான்,

      Delete
  2. கலந்தாய்வு அட்டவணை எப்பொழுது வெளியிடப்படும்

    ReplyDelete
  3. Counselling schedule yeppo விடுவீங்க

    ReplyDelete
  4. ஈயத பூசின மாறி இருக்கணும் ஆன????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி