திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும். பட்ஜெட்டில் ரூ.36,895.89கோடி கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல.
பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸடாலினின் வழிகாட்டுதல் படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் மொத்தம் 1296 இடங்களில் நடைபெற்றது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு வேலை முடிந்து விட்டது என்று இருந்துவிடாமல் குழந்தைகளின் கல்வி எப்படி உள்ளது? பள்ளி எப்படி உள்ளது போன்றவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவதே, கூட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும் என்றார்.
Kettu kettu kaadhellaam
ReplyDeletepulichi pochi
உங்க புள்ளைங்க எங்க படிக்கறாங்க / படிச்சாங்க 🤔🤔🤔 உங்க புள்ளைங்க அங்க படிச்சா தானே பள்ளிக்கு பெருமை 😄😄
ReplyDeleteஆமாம் அரசு பள்ளி வறுமையின் அடையலமல்ல ஆசிரியர் தகுித்தேர்வு பாஸ் செய்தவர்கள் தான் வறுமையின் அடையாளம்
ReplyDeleteஇப்படியே காலம் ஓடும்.ஏற்கனவே அரசு பள்ளிகளில் இருந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.இன்னும் ஒரு மாதம் போனால் பழையபடி அரசு பள்ளிகளின் மீது மக்களின் நம்பிக்கை போய்விடும்.ஏனெனில் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தார்கள்.
ReplyDeleteஇதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
ReplyDeleteSuper DMK government
ReplyDeleteமுட்டாள் க.அமைச்சர்
ReplyDelete