ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! , - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2022

ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! ,

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சர் பேட்டி சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று மாலை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 


 அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவது, தரமான கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 


 ஆசிரியர்கள் காலிப்பணியிடம்


பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கழிவறைகள் அமைப்பு, குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகள் தான் அதிகளவில் உள்ளது. தற்போது ஆசிரியர்களின் பணி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டத்தில் தெரியவரும். அதன்பிறகு எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என தெரியும். 


அதற்கு ஏற்ப ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 80 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் ஆர்.டி.இ. சட்டத்தின்படி ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 


ஆசிரியர்கள் தயக்கம் 


கொரோனா தொற்றுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மாநில அளவில் பொருளாதாரத்தில் பின் தங்கியதாக 44 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோன்ற பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆர்வத்துடன் பணிக்கு செல்வது போல், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் மட்டுமே தேவைப்படுகிறார்கள். 


ஆனால் 6 லட்சத்து 6 ஆயிரம் பேர் தன்னார்வலர்களாக பணியாற்ற பதிவு செய்துள்ளனர். தன்னார்வலர்களின் பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்த பிறகே நியமனம் செய்கிறோம். அவர்கள் மீது புகார்கள் ஏதேனும் வந்தால் அதை விசாரிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

24 comments:

 1. Replies
  1. TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு 'டாஸ்மாக்' பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
   அரசு வருவாயை பெருக்க ஆர்வமாய் உள்ளோம்.
   அரசோடு சேர்ந்து நாங்களும்
   'ஊத்திக் கொடுக்க'தயார்.

   Delete
 2. இல்லம் தேடிக் கல்வி திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும் என்ற அறிவிப்பு வந்தபோதே தெரியும் அந்த அரசாங்கமும் ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நபர்களுக்கு பணிநியமனம் வழங்காது என்பது தெளிவாகிறது.நமக்கு விடியலே கிடையாது.

  ReplyDelete
 3. ஆக மொத்தம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த விடியலும் இல்லை.😡😡😡😡😠😠😠

  ReplyDelete
 4. நண்பர்களே இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருக்காமல் தங்களால் முடிந்த ஏதாவது ஒரு தேர்வு எழுதி வாழ்க்கையை வாழப் பாருங்கள்

  ReplyDelete
 5. டேய் பொய்யும் மொழி சுடலை ஸ்டாலின் வெங்காயம் உங்களால் எல்லா மக்களுக்கும் விடியல் வரும் என்று பார்த்தால் இரவு தான் வரும்

  ReplyDelete
 6. இனிமேலாவது அனைவரும் எந்த அரசியல்வாதிகளை நம்பி இருக்காதீர்கள். அவர்களின் பேச்சு
  நம்முடைய ஓட்டிற்காக மட்டுமே.

  ReplyDelete
 7. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லுவார்கள், அதே மத்திய அரசு கொண்டு வந்த tet தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை வைக்க வேண்டுமாம், இதுதான் உங்க திராவிட மாடல் ஆட்சியா முதல்வர் அவர்களே!

  ReplyDelete
 8. குடிக்கார கல்வித்துறை, எல்லாமே போதையில் தான் இருப்பாங்க போல, tnpsc மூத்திரத்தை கொஞ்சம் வாங்கி குடிங்கடா அப்பாவது அறிவு வருதான்னு பார்ப்போம், tnpsc ல 90 மார்க் எடுத்தால் pass, ஆனால் யாரு அதிக மார்க் எடுக்கறாங்களோ அவர்களுக்கு தான் பணி, இந்த method tet க்கு follow பண்ணலாம்

  ReplyDelete
 9. This is my repeated request to Kalviseithi admin to provide the source from where the above news is published.
  There are lots of controversies to understand the article published. If you publish either scanned copy of above content or source extraction, will be helpful for page readers.
  Please understand kalviseithi.

  ReplyDelete
 10. தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 80 ஆயிரம் பேர் உள்ளனர். b.ed padipathu,sec gr.traininig ellame waste.ini yarum b.ed.,m.ed.,teacher training padikka vitatheerkal.tnpsc paikka sollunga 2022-2023 anaivarum ithai follow pannunga

  ReplyDelete
  Replies
  1. ஐயா, மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.. ஆசிரியர் தகுதித்தேர்வில் 80000 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று சொல்வதில் உண்மை இல்லை ஐயா..

   மிஞ்சிப்போனால் 20000 to 25000 பேர் மட்டுமே உள்ளோம் ஐயா..


   அதற்குரிய காரணம்,

   1.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த 80% பேர் 2013,2017,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற paper 1 மற்றும் Paper 2 ஆகிய இரண்டு தாள்களிலும் அதிகபட்சமாக தேர்ச்சி பெற்றுள்ளோம்..

   அப்படிப் பார்க்கும்போது, ஒருவர் 6 முறை, 5 முறை, 4 முறை, 3முறை, 2 முறை, 1 முறை தேர்ச்சி பெற்று உள்ளோம்..

   கணிதத்தின் படி பார்க்கும் பொழுது, இதுவரையில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தனி நபர்களின் எண்ணிக்கை மிக மிக கணிசமாக குறையும் ஐயா..( உதாரணமாக, 1000 பேர் 6, 6 முறை தேர்ச்சி அடைந்துள்ளார்கள் எனில்,மொத்தம் 6000 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளார்கள் என்ற விபரம் நமக்கு கிடைக்கும். ஆனால் தனிநபர்கள் என்று வரும்பொழுது 1000 பேர் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவார்கள்..நாங்கள் 6000 பேர்களுக்கு பணி நியமனம் கேட்கவில்லை. 1000 பேருக்கு மட்டுமே பணி நியமனம் கேட்கிறோம் ஐயா)

   2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பல ஆயிரம் பேர் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்பொழுது அரசு பணியில் உள்ளார்கள் ஐயா. இதனால் இதிலிருந்தும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை என்று பார்க்கும் பொழுது மிகமிக கணிசமாக குறையும் ஐயா.

   3.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆயிரம் பேர் நிரந்தரமாக பணியிடம் பெற்று ஆசிரியர் தொழிலை செய்து வருகின்றார்கள் ஐயா.. இதிலிருந்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையானது மீண்டும் கணிசமாக குறையும் ஐயா..

   4. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பல ஆயிரம் பேர் குரூப் 2 குரூப் 4 தேர்வில் வெற்றியடைந்து அவர்கள் அரசு பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.. இதிலிருந்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மீண்டும் கணிசமாகக் குறையும் ஐயா..


   5. இப்படி மேற்சொன்ன காரணங்கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களின் தனிநபர் எண்ணிக்கையானது மிக மிக மிக மிகக் குறைவு ஐயா...

   *80000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்து காத்து இருக்கின்றோம் என்ற தகவல் உண்மையில்லை.தோராயமாக 25000 பேர் மட்டுமே உள்ளோம் ஐயா*

   Delete
 11. Seniority method la teacher posting podunga sir.... Admk solli solliye kaalattha ottittanga... Neengalum vanthu anthamathiriye ilukkuringa... 2013year la pass pannavangalukku first posting podunga sir...

  ReplyDelete
 12. அந்த மற்றும் இந்த அரசிலும் எதுவும் நடக்கப்போவதில்லை.பாவம்ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும்.

  ReplyDelete
 13. No 80000 thousands teachers, because 1 teacher passed 2 to 6 times. But still ur not taking correct measurement. Ur so lazy educational department

  ReplyDelete
 14. Comments அனைத்தையும் அரசின் கவனத்திற்கு கல்வி செய்தி கொண்டு செல்லவேண்டும்.

  ReplyDelete
 15. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் தமுக ஆட்சிகு இதுவே கடைசி முறை

  ReplyDelete
 16. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் திமுக ஆட்சி இதுவே கடைசி முறை

  ReplyDelete
 17. Yaar vandhalum viraivil yenginra vaarthai mattume paditha namakku padippin arumai theriyadha moodargalin badhil...sondhama ini oru velai seidhukkollungal...Nam vaazkai sirakkum

  ReplyDelete
 18. நீங்க சொல்ற அந்த 'பல்வேறு கேள்விகள்' வரப்போற டெட் எக்ஸாம்ல
  இடம் பெறுமா..?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி