மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர இனி அனுமதி இல்லை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2022

மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர இனி அனுமதி இல்லை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் (பைக்கில்) பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில், அண்மைக்காலங்களில் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் நேரிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மாணவர்களும் பொதுமக்களும் விபத்துகளில் சிக்குகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி வளாகங்களுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல பள்ளி மாணவர்கள் பலர் விதிகளை மீறி பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை கும்பலாக ஒரே நேரத்தில் வெளியே அனுப்பாமல் 15 நிமிட இடைவேளையில் தனித்தனி குழுக்களாக மாணவர்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. அண்ணே கல்யாணம் இப்ப நின்னு போயிடும்
    எப்படிடா
    நான்தான் மாப்பிள்ளையோட சீப்பை எடுத்து வைத்துவிட்டு இருக்கேனே அப்புறம் எப்படி அவர் தாலி கட்டுவார்

    ReplyDelete
  2. 15 நிமிட இடைவெளியில் ஒரு 45 பஸ் போகும்
    அதனால ஒவ்வொரு ரெண்டு நிமிஷத்துக்கு மாணவர்கள் பஸ் ஏறி போயிட்டே இருப்பாங்க நீங்க ஒரு பத்து நிமிஷம் மாணவர்களை மெதுவா விடும் சொல்றீங்களா
    அந்த வழியா வரதே ஒரு பஸ் அதுவும் லேட்டாக வரும் அந்த ஒரு பஸ்ஸில் தான் நூறு பேரை ஏரியா ஆகணும்

    ReplyDelete
  3. மாற்ற வேண்டியது மாணவர்கள் இடத்திலிருந்து அல்ல ஆட்சியாளர்களின் இடத்தில் இருந்து வரவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி