Public Exam | 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2022

Public Exam | 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

 தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்ப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.


கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

3 comments:

  1. முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முதலில் நடத்துங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆசிரியர்களை தவிக்க விட்டு விட்டு உங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் அறிவித்தால் எப்படி? தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வுக்கு காத்துக்கொண்டு உள்ளனர். அதை முதலில் புரிந்து கொண்டு அவர்களின் கவலைகளை போக்குங்கள். நன்றி

    ReplyDelete
  2. நாளை காலை என்பது எப்பொழுது

    ReplyDelete
  3. அய்யா பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யுங்கள் நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி