ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கு விதிமுறை அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 14, 2022

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கு விதிமுறை அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது.

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையின்படி மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடங்கப்படும்  என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர்  ஜெகதீஷ் குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.  இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்நிலையில், இது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை யுஜிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் இதேபோல்  ஒரே நேரத்தில்  இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய முடியாது.

*  ஒரு மாணவர் ஒரே நேரத்தில் ஒரு பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக் கழகத்திலோ  2 பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், 2 வகுப்புகளின் நேரமும் ஒரே நேரத்தில் அமையாத விதத்தில் இருக்க வேண்டும்.

*  ஒரு பட்டப்படிப்பை கல்லுாரிக்கு நேரடியாக சென்றும், மற்றொரு பட்டப்படிப்பை திறந்த நிலை, தொலைதுார கல்வி முறையிலும் படிக்கலாம்

* ஆன்லைன் கல்வி முறை அல்லது திறந்த நிலை, தொலைதுார கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.

* யுஜிசி அல்லது ஒன்றிய அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், திறந்தநிலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளில் மட்டுமே, இந்த படிப்புகளை படிக்க வேண்டும்.

* இது இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். முனைவர் பட்டத்துக்கான (பிஎச்டி) படிப்புக்கு பொருந்தாது.

10 comments:

 1. எத்தனை பட்டப்படிப்பு படித்தாலும் வரும் காலங்களில் அரசு வேலை கிடைப்பது அரிதாக இருக்கும்.

  ReplyDelete
 2. Already Simultaneous course not eligible for trb.இனிமே படிச்சாதான் செல்லுமா? இல்ல ஏற்கனவே இப்படி படிச்சது இனிமேல் செல்லுமா? இல்ல இந்த TRBகாரவங்க யாரு சொன்னாலும் ஒத்துக்கமாட்டாய்களா? இதனால இரண்டாவது முறையாக M.Sc போட்டு படிப்பவர்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete
  Replies
  1. mistake is urs. how do u study two courses at the same time. if u do b.ed regular and msc in distance at the same time, the regular students will be affected right. ugc approved two parallel courses at the same time, but for recruitment they don't allow

   Delete
 3. Sir,it is allowed by TRB after now.because permission is granted by UGC now. Not already. But my doubt is not that.can write the pg trb exam already finished students or after now study students? TRB must take the rules regulation of UGC.this case bending for long time.but now finished.so trb will be accept after now.

  ReplyDelete
 4. ஏற்கெனவே 4,5 பட்ட படிப்பு முடித்து வேலை இல்லாமல் இருக்கும் போது இது தேவை இல்லாதது

  ReplyDelete
 5. Engalukku panam thavaipa unakenna? Varum kalangalil pathhu patta padippu kuda padikalam anal oru mayirum pudunga mudiyathu.

  ReplyDelete
 6. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல வளர்ந்து வந்த நிலையில் பல ஆசிரியர் மகான்கள் கல்லூரி பக்கம் செல்லாமலேயே பணத்தை செலுத்தி கல்வியல் பட்டப்படிப்பு முடித்தனர். அதே காலத்தில் முதுகலை பட்டம் அல்லது தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். இன்று இவர்கள் எல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் இவர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க போகிறார்கள். முறையாக பட்டப் படிப்பு முதுகலை படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்பொழுதும் ஏற்படுத்தி வருகிறது. இதை யாரும் கண்டறிவதே இல்லை. இது போலவே சில ஆசிரியர்கள் குறுக்கு வழியில் அரசுப் பணியை பெற்று இருப்பதாகவும் அறியப்படுகிறது. இவர்களெல்லாம் எதிர்கால மாணவர்களின் வழிகாட்டிகள்.

  ReplyDelete
 7. Pesaamal degree virpanai ena solli vidungal ...UGC il erukkum arivaali gal pondra muttalgal...

  ReplyDelete
 8. ஒரே நேரத்தில் இளங்கலை ஒரு பல்கலை கழகத்திலும் முதுகலை பட்டம் வேறு பல்கலை கழகத்திலும் படிக்கலாமா..,...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி