அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2022

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு

அரசு ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு எச்சரித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2 ஆவது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி 2 ஆவது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 


மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர். 


எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால், சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

9 comments:

  1. விவாகரத்துக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்யலாமா.

    ReplyDelete
  2. நல்ல கேள்வி.இது எல்லாம் நம் நேரம்.."உலகம்"😡😡😡😡

    ReplyDelete
    Replies
    1. புரியவில்லை. தெளிவான விளக்கம் தேவை.

      Delete
  3. சட்டரீதியாக விவாகரத்து பெற்றவர்கள் தாராளமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் இதில் ஏதும் தவறில்லை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இயலாது

    ReplyDelete
    Replies
    1. காவல் நிலையத்தில் எழுதி வாங்கி பிரிந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்யலாமா.

      Delete
    2. சட்ட சிக்கலை சந்திக்க நேரும். கோர்ட்டு மூலம் தீர்த்துக் கொள்வது நலம்

      Delete
    3. Brother, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு தலைமை ஆசிரியை இரண்டாவது கணவரிடம் காவல் நிலையத்தில் வைத்து ஆவணங்களில் கையொப்பம் வாங்கி விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் கணவருக்கு இதுவரை எந்த பணபலனும் கிடையாது. இது சரியா. Please சொல்லுங்கள்.

      Delete
  4. Muslim second marriage is allowed with the muslim personnel law.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி