''அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து 2004ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான சார்நிலை பணி விதிகள் வகுக்கப்பட வில்லை. இதனால் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியவில்லை. மேலும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகக்கூட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது இல்லை.பதவி உயர்வு கேட்டு 2021 ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். உரிய பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அமைச்சர், கமிஷனரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம், என்றார்.
நன்றி ஐயா எங்கள் நிலையை எடுத்துரைத்தற்கு
ReplyDeleteநேரடி நியமனம் செய்ய பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே,
ReplyDeleteMiddle school HM (75%) ஆக நியமிக்க வேண்டும்,
அதுபோலவே M.A/M.SC, B.Ed,/M.Ed
கல்வி தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக,
நியமனம் பெற்ற பட்டியல் பழங்குடி இன ஆசிரியர்களை இன்னும்( 24 ஆண்டுகள்) எந்த நிலை உயர்வும் செய்யாமல் வைத்திருப்பது மிக பெரிய கொடுமை,
இது அதிகாரிகளின் சாதிய
வன்கொடுமை ஆகும்
தொடக்க கல்வித்துறையில் 2004 முதல் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பிற மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தன் சொந்த மாவட்டத்தில் பணியிட மாறுதல் பெற அரசு வழிவகை செய்ய வில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால்
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடத்தை இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப படுவதால்
மற்றும்
state level சீனியாரிட்டி தொடக்க கல்வித்துறையில் கொண்டு வராததால்
இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
Thanks to tngtf
ReplyDelete