முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2022

முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு

 

கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் 29-ம் தேதி வரை கணினிவழி போட்டித் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ம் தேதி வெளியிடப்பட்டன.


இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ. 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டு, பாட வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

4 comments:

  1. என்ன இது புது நியூஸ இது டிஆர்பி விட்டு மூன்று நாள் ஆகுது

    ReplyDelete
  2. கல்விச்செய்தி mbc admin எஎத்தனை மமுறைதான் இதை வெளியிடுவீர்கள்....தேர்வர்கள் மீண்டும் வழக்குத்தொடுக்கும் வரையுமா....2019தேரவில் Bc ,mbc தேர்வர்களைமோதவிட்டு வேடிக்கை பார்த்தது போல் 2021தேர்வையும் செய்யவேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்கச் சொன்னீர் நண்பா

      Delete
  3. PG TRB CUT OFF KU SUBJECT WISE AH GOOGLE SHEET போடுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி