அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதா? - கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2022

அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதா? - கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

 

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக, குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.  

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏழை, எளிய குடும்பங்களில் இருந்துதான் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்தும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மை பெறப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர் வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இருமடங்காக உயரும் நிலை உருவாகும். நிலைமை இவ்வாறிருக்க சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசுப் பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பி வருவதன்மூலம் அரசுப் பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  கேட்டுக்கொள்கிறேன். 

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கத்தால் எங்கோ ஒரு சில மாணவர்கள் ஈடுபட்ட செயல்கள் வருந்தத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் அனைவரும் ஒழுங்கீனமானவர்கள் போலவும் சித்தரித்து வீடியோ பரப்பப்படுகிறது. அல்லது ஒரு சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டுப் பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். 

அரசுப் பள்ளிகள்தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப் பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால், அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரிப் பூசும் வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’. 

இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. சொம்பு இங்க மட்டும் வரீங்க....தொடக்க கல்வி துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு இன்னும் நடக்கல அதபத்தி கேளு....சங்க nithiyavathu உங்களுக்கு செரிக்கும்........அதவிட்டு சொம்பு அடிக்க வந்துட்டீங்க.....

    ReplyDelete
  2. சங்கங்களை ஒழித்தால் தான் அரசுப் பள்ளிகள் உருப்படும்.

    ReplyDelete
  3. ஆசிரியர்களிடம் வருடம் வருடம் சந்தா ரூ 300 பெற்று கொண்டு அவர்களின் பணி பாதுகாப்பிற்காக போராடாமல் அரசுக்கு எதிராக சொம்பு தூக்குவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

    ReplyDelete
  4. இந்த பதிவு சங்கங்களின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த போகிறது.லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இப்பதிவை பார்பார்கள்

    ReplyDelete
  5. இவன் எல்லாம் ஆசிரியர் சங்கத்தலைவர் கருமம் கருமம் இவன் சங்கத்தில் இருப்பவர் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  6. First govt sari illa phone yen school kondu varanga student ithai yarum kekala.ketal online class la question anupurom mayira anupurom Matta anupurom nu solla vendiyathu

    ReplyDelete
  7. இதெல்லாம் பார்த்தால் வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகரித்துவிட்டால் ஆசிரியர்கள் அதிகம் நியமனம் செய்ய வேண்டும் அரசு கஜானா காலியாகி விடும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று இப்போது இருந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை குறைப்பதற்கு கூட செய்வாங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி