ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன்.சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்கு உரியது. ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடியோக்கள் ஊடகங்களில் சுற்றுகின்றன. அவை பெரும்பாலும் மாணவர்களால் எடுக்கப்பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அவை வெளியே தெரிவதில்லை. ஆசிரியர்கள் மென்மையாக அறிவுரைகூறி கடக்க வேண்டிய நிர்பந்தம்.
.
பெண் ஆசிரியர்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வுடனோ ஜாக்கிரதை உணர்வுடனோ பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. அது எப்படிப்பட்ட மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் பெண் ஆசிரியர்களை உள்ளாக்குகிறது?
சில கேள்விகள் நமக்கு எழுகின்றன.
1.கொரோனா காலச்சூழல்தான் காரணம் என்றால் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இவைபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா? நடந்தால் அவை ஏன் வெளியே தெரிவதில்லை?
2.கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் காரணம் என்றால் அவற்றைத் தடுப்பதற்காக மிகத்தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்கிறதா?
3.மாணவர்களிடம் அன்பாகச் சொல்ல வேண்டும், உரையாட வேண்டும் என்று சொல்லும் சமூகத்தின் அறிவுரைகளைப் ஆசிரியர்கள் பின்பற்றிக் கொண்டிருப்பதற்குப் பின்பும் இப்படி நடந்து கொள்ளும் மாணவர்களை என்ன செய்வது?
4. ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அரசு ஏன் இதில் ஆர்வம் காட்டுவதில்லை?
5.வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் இன்று தெரிவித்திருக்கிறார்.இது நடைமுறையில் சாத்தியமா?
6. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களுக்குப் பெற்றோர், சமூகம்,அரசு போன்றவற்றின் கூட்டுப் பொறுப்பினைப் புறந்தள்ளி, எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களைப் பொறுப்பாக்குவது சரிதானா?
7.பள்ளிக்கு ஏன் வரவில்லை, ஏன் படிக்கவில்லை, ஏன் சீருடை அணியவில்லை, ஏன் முடிவெட்டவில்லை,ஏன் எழுதவில்லை, ஏன் ரெகார்ட் நோட்டு வைக்கவில்லை, ஏன் தாமதமாக வருகிறாய் என எதையும் மாணவர்களிடம் கேட்காமல், நூறு சதவீத தேர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும், நூறு சதவீதம் மாணவர்களின் வருகை இருந்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களை கடுமையாக வருத்துவது எதனால்?
8. வகுப்பறையில் ஆசிரியர்களிடமோ, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒழுங்கீனமான செயல்களின் ஈடுபடும் மாணவர்களால் அந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை மற்ற மாணவர்களும் அவர்களிடம் கேட்க முடியாது. கேட்டால் அடிப்பார்கள் என்று அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆசிரியர்களையும் ஆபாச சொற்களால் பேசுகின்றனர். இதற்கு சஸ்பெண்ட் செய்வது மட்டும் தீர்வாகுமா?
9'.நாங்கள் சொன்னால் ஜட்ஜே நம்புவார்' என்பதைப்போல நாங்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்னும் எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்தது எது? இதிலிருந்து எப்படி மீட்டெடுப்பது?
10.அலைபேசியை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்றால் அலைபேசியை கொண்டுவரும் மாணவர்களை என்ன செய்வது?ஆசிரியர்கள் மாணவர்களைப் பரிசோதிக்கக் கூடாது, ஏன் கொண்டு வந்தாய் எனக் கேட்கக்கூடாது என மேலிடத்து அறிவிக்கப்படாத உத்தரவு. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் என்ன முடிவு எடுப்பது?
11.மாணவர்களை ஏதாவது கேட்டு, விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் அந்த ஆசிரியரே முழுப் பொறுப்பு. எந்த அதிகாரியும் ஆசிரியர்கள் பக்க நியாயத்தை உணராதது ஏன்?
12.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளைப் பிரித்து ,கல்லூரிகளில் இணைத்து ஜூனியர் காலேஜ் என்று ஒன்றை ஏன் கொண்டுவரக் கூடாது?
13.தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. அப்படி இருந்தும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளை இரண்டாகப் பிரித்தால் நலமாக இருக்கும். இதை அரசு முன்னெடுக்குமா?
14. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர்கள் என்றால்தான் கற்பித்தல் கற்பித்தல் சரியாக நடக்கும்.ஆனால் அரசுப் பள்ளிகளில் சுமார் அறுபது, எழுபது மாணவர்கள் இருக்கிறார்கள்.எனவே 1:40 என்ற விகிதத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
15.இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், கல்வித் தரத்தை உயர்த்த அரசு கொண்டு வரும் திட்டங்கள் எவையும் சிறப்பான பலன் தரா.
16.கொரோனா காலத்தில் எல்லா மாணவர்களுக்கும்தானே கற்றல் இடைவெளி ஏற்பட்டது? இல்லம்தேடி கல்வி ஏன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே கொண்டுவரப் பட்டுள்ளது? ஒன்பது முதல் பன்னிரண்டு வகுப்புவரை இதை நீட்டிக்கவில்லை?
மாணவர்கள் வயது அப்படி. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.ஆசிரியர்கள்தான் அவர்களைத் திருத்த வேண்டும் என்று சொல்பவர்கள், உங்கள் பிள்ளைகளை அதே அன்புடன் பேசி திருத்த உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
---- சுகிர்தராணி,
அரசுப் பள்ளி ஆசிரியை.
Yes. I agree.
ReplyDeleteஉண்மை.
ReplyDeleteஒரு பிள்ளையின் நடவடிக்கை முதலில் பெற்றோருக்குத்தான் தெரியவரும், ஆனால் அவர்கள் கண்டுக்காமல் விட்டுவிட்டோ அல்லது கண்டித்து அடங்க மறுத்தோ செல்லும் பிள்ளைகளை எட்டுமணி நேர வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் போக எப்படி அறிவுரை வழங்க இயலும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மது, போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் இதை அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை, அரசு சட்டதிட்டங்கள் தான் ஆசிரியர்களின் கைகளை கட்டிபோட்டுள்ளன. தவறான நட்பு வட்டம் ஒரு மாணவனுக்கு அமைந்தால் அவனின் மாற்றம் முதலில் பெற்றோருக்குத்தான் தெரியவரும், ஆக இன்றைய சமுதாய சீரழிவிற்கு பெற்றோரும், அரசு சட்டங்களும், சமூகமே பொறுப்பு. எவ்விதத்திலும் ஆசிரியர் பொறுப்பவதில்லை. எங்கோ சில ஆசிரியர் தவறிழைத்தால் அது ஒட்டுமொத்த ஆசிரியர் குடும்பமும் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எந்த ஆசிரியரும் மாணவர்ககிடம் கஞ்சா விற்பதில்லை, எந்த ஆசிரியரும் பள்ளிக்கு அருகில் பீடி விற்பதில்லை, எந்த ஆசிரியரும் பள்ளிக்கு அருகில் tasmac அமைப்பதில்லை, எந்த ஆசிரியரும் மாணவர்களின் சிகை அலங்காரத்தை வடிவமைப்பதில்லை, எந்த ஆசிரியரும் மாணவர்களிடம் கத்தியை கொடுத்து வன்முறையை தூண்டிவிடுவதில்லை, இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம், மாணவர்கள் புகைக்கலாம், பகைக்கலாம், வன்முறையை தூண்டலாம், மதுபோதையில் பெண்ணியத்தை சிதைக்கலாம், இதற்க்கு யார் காரணம், வேடிக்கையாகும் சட்டமும், சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளுமே ! சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய இடத்தில் குட்கா, கண்டித்து தண்டனை கொடுக்கவேண்டிய சட்டத்தில் இளம் சிறார், சிறார் என்ற சலுகை. காவல்துறை, வழக்காடும் சட்ட அறிஞர்களில் பலர் பணம் கொடுத்தால் போதும் தவறை மறைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகிவிடுகின்றனர். ஆக இன்றைய மாணவர்களை இன்னும் நல்வழி படுத்த போராடிக்கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். நன்றி !
ReplyDeleteThank you for you valuable response.It is not only for only one teacher but for all of us.Some of us hide.Because they know we cannot do any change.
ReplyDeleteஇந்த மூன்றுமே இல்லை.அவர்களே தன்னை திருந்தனால்தான் உண்டு.
ReplyDeleteஎந்த ஒரு ஆசிரியரும் தங்கள் பிள்ளை ஆசிரியராக வரவேண்டும் என்று இனி நினைக்க மாட்டார்கள் .ஆடுகூட மேய்க்களாம்.ஆனால் ஆசிரியராக யாரும் வரவேண்டாம்.தாய்ப்பாலை தரம் பார்ப்பதும் ஆசிரியர்பணியில் குறைபாப்பதும் ஒன்றுதான்
ReplyDelete💯👋👋👋
Delete100 சதவீதம் உண்மை
Delete👏👏👏👏👏👍👍👍👍👍
DeleteAll pass. 6 வதில் சேர்த்து 4 வருடம் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் 10வது வந்து விடுவர்.
ReplyDeleteLong absent வேலைக்கு தான் செல்கிறார்கள். ஆனால் உடல்நலம் சரியில்லை என்று தான் செல்கிறார்கள்.
எழுத படிக்க தெரியாமல் 10வது வரை வந்து விடுகின்றனர்.
ReplyDeleteஎப்படி பாஸ் செய்ய வைப்பது?
இதற்கு பதில் 1 வது முதல் உங்களிடம் தானே படித்தார்கள்.
நீங்கள் சரியாக சொல்லி தரவில்லை .
படித்தால் தான் தேர்ச்சி என்ற நிலை இல்லை . பள்ளியில் சேர்ந்தாலே தேர்ச்சி எனும் போது படிக்க மனம் வருவதில்லை
மாணவர்களூக்கு தண்டனை வழங்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கினால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteAvargalukku..... Cut
ReplyDeleteஅரசு தக்க சட்டம் இயற்றி மாணவர்களை திருத்துவதற்கு வழி செய்யாமல் ஆசியர்கள் மேல் பழிபோடுவது தவறாகும்.
ReplyDeleteசுகிர்தராணி அவர்கள் கருத்துக்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் படித்து தக்க வழிகாட்டு நெறிமுறை களை எடுத்து மாணவர்களை திருத்தவேண்டும். சப்ப
ReplyDeleteஆல் பாஸ் முறையை ஒழித்தால் தான் மாணவர்களை திருத்தமுடியும்.
ReplyDeleteAll pass method close pannunga
ReplyDeleteஅரசு ஊழியர்கள் அவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்
ReplyDeleteவந்துட்டாண்டா
Deleteஅரசு ஆசிரியர்கலே மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டாம் என்று சொல்லும் காலம் வரும்
ReplyDeleteஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு கொழுத்த பன்னாட குண்டச்சி டீச்சர், ஒரு கொழுத்த வீணா போன பரட்டை தலை வாத்தியான் கட்டாயம் இருப்பர். அப்பள்ளியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேராக இருப்பது அந்த ஈத்தரை நாய்கள்தான். அந்த ஈன இழிகுறி டீச்சர்களை ஒழித்தால் தான் அரசுப்பள்ளி விளங்கும். பரதேசி நாயிகள் கொரானாவுல போயி சேரும்னு பாத்தால் வீட்டுக்குள்ள ஒளிஞ்சி தப்பிச்சிட்டுதுங்க.. செத்தவங்க எல்லாம் நல்ல டீச்சருங்க.. இந்த கொழுத்த நாயிகள் எஸ்கேப் ஆயிடுதுங்க.
ReplyDeleteஆசிரியரை மிரட்டும் சமுதாயம் நாளை ஆட்சியாளர்களையும் மிரட்டும் இது நடக்கும்
ReplyDeleteமாற்றம் ஆசிரியரிடம் வரவேண்டும்.எந்த மாணவனும் செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் கேடாக வில்லை.நீங்கள் ஏன் முழுமதிப்பெண் வழங்குங்குறீங்க.தேர்வறையில் கண்டிப்புடன் நடக்காமல் சில ஆசிரியர்கள் இருப்பதும்.பிட் அடிப்பதை கண்டும் காணாமல் இருப்பதும் எதற்காக?.பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் போது பெயில் ஆகும் மாணவர்களுக்கு கருணைகாட்டி just pass வழங்குவது எதற்காக?. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு மற்றும் நல்வழிப்படுத்த எத்தனை உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்?.பல மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தப்பு செய்யும்போது கண்டிப்பதில்லை.கண்காணிப்பதுமில்லை.இதில்40நிமிடம் வகுப்பில் இருக்கும் ஆசிரியர் எந்த வேலையை தான் செய்வார்?.உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர்,முதன்மை கல்வி அலுவலர், கல்வி இயக்குனர்,ஆணையர்,EMIS, NCERT மற்றும் அமைச்சர் என அந்த ஆசிரியர் அனைவருக்காகவும் பணியாற்ற வேண்டி உள்ளது.இதில் மாணவர்களுக்காக எத்தனை ஆசிரியர் மனதார பாடம் கற்பிக்க முடிகிறது சொல்லுங்கள்....
ReplyDeletesome headmaster/teacher need only month salary..
ReplyDeletesome parents need only mobile/TV...
some politician need only advertisement...
some person need only religion....
you need ???????????????
U need publicity
Deleteமாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்க வேண்டும்.படிப்பறிவு இல்லாத மற்றும் படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு எதற்காக கட்டாய கல்வி? இன்றைய ஆசிரியர்களின் கேளி கிண்டலுக்கு திரைப்படமும் சோஷியல் மீடியாவுமே காரணம்.தனியார் பள்ளியில் சில ஆயிரம் சம்பளம் வாங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் போது இருந்த மகிழ்ச்சி.... அரசு பணிக்கு வந்தபின் பல ஆசிரியருக்கு இப்போது இல்லை.ஏன்டா...இந்த பணிக்கு வந்தோம் என தோன்றுமளவுக்கு.மன வேதனையான பணி இது.இன்றெல்லாம் மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆர்வம் கொஞ்சம் கூட இல்லை.. இதற்கு யார் காரணம்? நமது பாடத்திட்டமும் தேர்வு முறையுமே.மாணவர்களிடம் சகிப்புத் தன்மை சுத்தமாக இல்லை....ஒரு மாணவனை ஆசிரியர் அடித்தால் அது தப்பு.இதுவே அவனது சக வகுப்பு மாணவர் அல்லது ஊரில் உள்ளவர் அல்லது போலீஸ் அல்லது திருமணத்திற்கு பிறகு அவனின் மனைவி இவர்கள் அடித்தால் அது தவறில்லை?. அப்போது மட்டும் இதுபோன்ற செய்தி எந்த நியூசிலும் வருவதில்லை.அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதில்லை.எஙகள் நோக்கம் மாணவர்களை அடிக்க வேண்டுமென்பதில்லை. அடித்தால் ஆவது நல்வழிக்கு வருவார்களா? பாடம் கவனிப்பார்களா? அவர்களும் சொந்த முயற்சியில் தேர்ச்சி அடைவார்களா?. நன்றாக படிக்கும் மாணவர்களை பாடம் படிக்க விடுவார்களா? மேலும் ஆசிரியர்களை நன்முறையில் பணிசெய்ய விடுவார்களா? என எண்ணி நாங்கள் எடுக்கும் கடைசி அஸ்திரம் தான் அடி.
ReplyDeleteபுதிய கல்வி கொள்கை தேவை...
ReplyDeleteஆல் பாஸ் ரத்தாகும்
முன்பு exam நேரம் 2.00 மணி - 100 mark.
ReplyDeleteஇப்போ exam நேரம் 3.15 மணி - 75 mark..
அறிவாளியின் செயல்...
அரசாணை மூலம் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன்வந்தால் மாணவர்களை ஆசிரியர்கள் திருத்தமுடியும்.
ReplyDelete