பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவார்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 9, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவார்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு.

 

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக புதிய அரசாணை ( G.O. (Ms) No: 62, Dated: 25-03-2022) - Download here....

பள்ளிக் கல்வித் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் – தேர்வுத்துறை புதிய உத்தரவு.10, 11 & 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு

➤10ம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு

➤11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி

➤மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வெழுத வசதி

➤தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி


இதுபோன்ற முக்கிய பயனுள்ள அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார், இது கண்டிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

1 comment:

  1. If any special C L avail for parents of IED çhildren, while attending camp for them.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி