அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Apr 30, 2022

அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்ளுக்கு 2021-2022 -கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


 நிபந்தனைகள் 

1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும் . 

2. துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல் நடவடிக்கை ஏதும் இருத்தல் கூடாது . 

3.துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதும் இருத்தல் கூடாது . 

மேற்காண் நிபந்தனைகள் சரியாக உள்ள பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியிலிந்து விடுவிக்க வேண்டும் . மேலே தெரிவித்துள்ள நிபந்தனைகள் பின்பற்றாமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அதன் முழுபொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. மனமொத்த மாறுதல் பெற்ற பாவபட்ட ஜென்மங்களுக்கு மட்டும் ஆணை கிடைக்கவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி