ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்... - kalviseithi

Apr 24, 2022

ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்...

பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..


உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..


மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..


உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..


இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே

 உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்..


ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்...

5 comments:

 1. வசனம் சூப்பர்

  ReplyDelete
 2. புத்தகத்தில் இருப்பதை ஒப்பிப்பது மட்டுமே ஆசிரியர் வேலை ...என்ற எண்ணம் ஆசிரியர் சமூகத்தில் தற்போது வேரூன்றி விட்டது....ஒழுக்கத்தைப் போதித்து மாணவசமூதாயத்தை நல்வழிப்படுத்துவது ஆசிரியர் வேலையல்லவா....ஆசிரியர் சமூகத்திலும் சாதி மதவேறுபாடுகள் புறையோடிக்கிடக்கிறது...மாணவர்களிடையே வேறுபாடு பார்ப்பதும் நடக்கிறது
  90களுக்கு முன்பு 100க்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே ஆசிரியர் என்ற இலக்ககணத்திற்கு உரியவரல்லாதவராக இருந்தனர். ஆனால் தற்போது 100க்கு 50%மதுஅருந்துபவர்களாகவும் அருவருக்கத்தக்க சொறற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர் முதலில் ஆசிரியர்ப்பணி என்பது எட்டுப்பாடவேலை வகுப்பறறையில் இருந்து மட்டுமே ஊதியம் பெறத்தகுதியாவர்என்ற தவறான எண்ணத்தை போக்குங்கள்..மாணவர் நலனில் பெற்றோர் ஆசிரியர்ரகூட்டுமுயற்சி தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 3. பள்ளிக்கு வந்தாலும் வராவிட்டாலும் EMIS இல் பெயர் இருந்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

  ஆசிரியர்கள் கற்பித்தலை குறைத்தல்

  1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் பாடம் நடத்தினாலும், நடத்தா விட்டாலும் 100% தேர்ச்சி உறுதி இந்த காரணம் தான் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படமல் பாடத் திட்டம் எழுதினால் மட்டும் போதும் என்ற மனநிலைக்கு வருகின்றனர். இதற்கு அரசின் தவறான கல்வி கொள்கை தான் காரணம்

  மாணவர்களின் ஒழுங்கீனத்தின் உச்சம்:

  10 ஆம் வகுப்பில் 5 பாடங்களிலும் தேர்ச்சி ஆனால் தமிழ் வாசிக்க தெரியல கூட்டல், கழித்தல் தெரியல பிறகு 11ஆம் வகுப்பில் சேர்க்கை.கீழ் வகுப்பில் படிக்காமல் வரும் மாணவன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு இருப்பதால் ஆசிரியர்கள் அவனை ஒழுக்கமா இரு, படி,தேர்ச்சி பெற வேண்டும் என்று சொல்வது மாணவர்களுக்கு பிடிப்பதில்லை இதனால் தான் பிரச்சினை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி