ஆசிரியர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு நீக்கம் - நாளிதழ் செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2022

ஆசிரியர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு நீக்கம் - நாளிதழ் செய்தி!

 

புதுக்கோட்டையை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முத்து . இவர் கடந்த 2006 - ம் ஆண்டில் பணி வரன்முறை செய்யப்பட்டார். ஆனால் 2004 - ம் ஆண்டில் இருந்து தனது பணியை வரன்முறை செய்து உரிய பணப்பலன்களை வழங் கக்கோரிய மனு கல்வி அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது . அதை ரத்து செய்யும்படி , மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , மனுதாரரின் பணி நியமனம் கல்வித்துறை பணி நியமன விதிமுறைகளின்கீழ் வராது என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார் . முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரம் மட்டும் பணியாற்றி , ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர் . அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆசிரியர் தொழில் புனிதமானது தற்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன . ஆசிரியர்களின் நடத் தையை பள்ளிக்கு உள்ளேயும் , வெளியேயும் உரிய அதிகா ரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் . எனவே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை , கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக ஆசிரியர் முத்து , மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.


 இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத் யாய் , விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். முடிவில் , இந்த வழக்கில் ஆசிரியர்கள் சம்பந்தமாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ஆனால் மனு தாரரின் கோரிக்கை மீது தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி