தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2022

தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது அவசியம். தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இன்று பிற்பகல் நடக்கும் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்வு நடைபெறும். வெளியான வினாத்தாளில் உள்ள எந்த கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது,என்றார்.

32 comments:

 1. Mirthika coaching centre.. ug Trb English material available from April 2nd week.. contact 7010520979

  ReplyDelete
 2. Oru associationum manamothamaruthale patti kelkirathkk illaya.namuk help panna mudiyatha namukulla association.arkum objectionillathathakum manamothamaruthal athukk koode pesamudiyala.nirayvetta mudiyatha korikaykale va thorama pesitiripanga

  ReplyDelete
 3. வணக்கம்🙏

  மனமொத்த மாறுதல் வேண்டி காத்திருக்கும் தோழர்களுக்கான தகவல்.

  இன்று ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்ட போது இன்றும் நாளையும் அனைத்து மு கல்வி அலுவலர்கள் மற்றும் மா கல்வி அலுவலர்களுடனான கூட்டம் நடைபெறுவதால் சந்திக்கமுடியாத சூழல் நிலவுகிறது.

  எனவே நாளை மறுநாள் நானும் தலைவரும் சந்தித்து பேசேகிறோம்.

  இவண்,
  மாநில தலைமையிடச் செயலர்.

  ReplyDelete
  Replies
  1. sikaram nadathunga yavalo nal wait pana... y ievalo late panrangalo...

   Delete
  2. மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் எல்லாம் லூசுங்களா ? கொஞ்சமாவது ஒரு யோசனை வேண்டா ? அட விண்ணப்பித்து இத்தனை மாசம் ஆகுதே ? மேலிடத்துல கேட்டு சீக்கிரம் முடிப்போம்னு ஒரு மேலதிகாரிகளுக்கு கூட எண்ணம் தோனலையா ? இவங்களுக்கு மட்டும் எதாவது ஒரு scheme னா சுடுது மடிய புடீன்னு உடனே செஞ்சு முடிக்கோனும்பாங்க.. ஆனா நமக்கு எதாவு ஒன்னுன்னா மாசக்கணக்கானாலும் கேக்க ஒரு நாதியும் இல்ல நமக்கு !!

   Delete
 4. They are not attending the phone calls they simply told that as per rule the order came

  ReplyDelete
 5. கண்டிப்பாக நல்ல முடிவு வரும்.

  ReplyDelete
 6. ethey maritha 23 rd la ierunthu sollaranga .. varum varum nu

  ReplyDelete
  Replies
  1. வெறுத்துப்போச்சு...

   Delete
  2. intha week nadakka yathum vaippu ieruka

   Delete
  3. யார் சரியான பதில் சொல்வார் ? இறைவனுக்கே வெளிச்சம்.. போங்கப்பா .. நீங்களும் உங்க கவுன்சிலிங்கும்...கவுன்சிலிங் முடிஞ்ச பிறகு தான் mutual transfer ங்கறது அபத்தமான policy.. அப்படியே பார்த்தாலும் DSE கவுன்சிலிங் முடிந்து இன்றோடு 12 நாள் ஆகுது !எதெதுக்குத்தான் போராடறது ? எதுக்குத்தான் கோர்ட்டுக்கு போறதுன்னே தெரீலை.கலியுகம்.

   Delete
 7. Aaruku theriyum? naleyk Thane associationilirunthu pesalamnn cholliyiruku.

  ReplyDelete
  Replies
  1. Last Friday வே TNPG teachers commissioner ஐ பார்த்து பேசீட்டதா திண்டுக்கல் ல ஒரு நண்பர் நம்பகமான தகவல்ன்னு சொன்னார்.எது நிஜம் ? எது உண்மை. ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது என்பதை போல் நியாயமா , பொறுமையா அணுகி எங்களின் நியாயமான கருத்தை எந்த association னும் சிரத்தை எடுத்து செயல்படுத்தறதா எனக்கு தோணலை..

   Delete
 8. nanum pona week association la kettan .. pesiyachu commissioner ketta process nadakuthu pona week ah go vanthurum nu sonnaga... but ievalo nal apuram valla.. mutual transfer enna problem ieruku DSE LA

  ReplyDelete
  Replies
  1. Commissioner ஏ வாய் திறந்து சொன்னாத்தான் உண்மை நிலவரம் தெரியவரும். But, இந்த mutual transfer ஆணை வழங்குவதில் யாருக்கு, என்ன பிரச்சனைன்னே தெரீலை. இப்படியும் ஒரு கவுன்சிலிங்கான்னு வெறுத்து வெம்புது மனசு..

   Delete
 9. விருதுநகர் மாவட்டத்தில் மனமொத்த மாறுதல் ஆணை வழங்கப்பட்டு பணிவிடுப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உறுதி செய்ய முடியவில்லை. இந்த தகவல் TNPGTA வில் வந்துள்ளது உண்மையா sir?

  ReplyDelete
  Replies
  1. Association pesave illa pole mutuale podatha

   Delete
  2. அந்த transfer order ஆணைய நான் whatsapp ல் பார்த்தேன். ஆனால் அந்த order வாங்கினவங்க mutual transfer ல joint பண்ணீட்டாங்களான்னு p.g association காரங்க தான் உறுதி படுத்தனும்.அதை ( mutual transfer order )மேற்கோள் காட்டினாலும் எங்க மாவட்டத்து C.E.O எந்த ஒரு பதிலும் இதுவரை தரலை எங்களுக்கு !!

   Delete
  3. இதை மட்டும் தான் குழுவில் பதிவிட்டார்கள்

   Delete
 10. பணி நிரவல் மற்றும் இடமாறுதல் கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனமொத்த இடமாறுதல் இன்னும் நடத்தப்படாமலேயே நிலுவையில் உள்ளது. அதற்காக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் காத்துக்கிடக்கின்றனர். மனமொத்த மாறுதல் வழங்குவதற்கு எவ்வித சிக்கல்களும் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே அருள்கூர்ந்து "மனமொத்த இடமாறுதலை" மிக விரைவில் நடத்தி முடிப்பதற்கு உடனடியாக ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம். மனமொத்த இடமாறுதல் பெறுவதற்கு 3 பேர் இணைந்து விண்ணப்பித்திருந்தாலும் அதையும் ஏற்குமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.

  ReplyDelete
 11. Replies
  1. நன்றி.. ஏழைகளின் ஆசையும், கோயில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது ?

   Delete
 12. 1. தமிழகத்தில் சமீபத்தில், பள்ளிக்கல்வித் துறையில், நடைபெற்ற பணிநிரவல், மற்றும் இடமாறுதல் கலந்தாய்வுகளை அரசியல் பிரமுகர்களின் தலையீடு அணுஅளவும் office இல்லாமல், ஊழல் முறைகேடுகளுக்கு இம்மி அளவும் இடம் தராமல் மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்த தங்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  2. நடந்து முடிந்த இடமாறுதல் கலந்தாய்வு செயல்பாடுகளில் சில குறைபாடுகள் இருந்தன என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். ஓரிரு நாட்களில் நடத்தி முடிக்க வேண்டிய இடமாறுதல் கலந்தாய்வுகளை வாரக் கணக்கில் நடத்தியதும் ஆசிரியர்களை பகல், இரவு என்று பார்க்காமல் தினமும் காத்துக்கிடக்கச் செய்த நிலைகளையும், எதிர்வரும் காலங்களில் தொடராமல் மிகச்சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு, இதிலிருந்து கிடைத்துள்ள அனுபவங்கள் பயன்படும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.

  நடந்து முடிந்த இடமாறுதல், பணி நிரவல் கலந்தாய்வில், கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் O.D. வழங்கிட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  3. கீழ்க்காணும் மிக முக்கியமான பிரச்சனைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து, அவைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

  ReplyDelete
 13. 4. பணி நிரவல் மற்றும் இடமாறுதல் கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனமொத்த இடமாறுதல் இன்னும் நடத்தப்படாமலேயே நிலுவையில் உள்ளது. அதற்காக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் காத்துக்கிடக்கின்றனர். மனமொத்த மாறுதல் வழங்குவதற்கு எவ்வித சிக்கல்களும் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே அருள்கூர்ந்து "மனமொத்த இடமாறுதலை" மிக விரைவில் நடத்தி முடிப்பதற்கு உடனடியாக ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம். மனமொத்த இடமாறுதல் பெறுவதற்கு 3 பேர் இணைந்து விண்ணப்பித்திருந்தாலும் அதையும் ஏற்குமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.

  5. பணி நிரவல் மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு, கூடுதல் பணியிடத்திற்கு, பணிமாறுதல் ஆணைப்பெற்று பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பட்டதாரி, தமிழாசிரியர்களுக்கு மார்ச் (2022) மாத ஊதியம் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று வரை அவர்கள், மார்ச் மாத ஊதியத்தை பெற முடியாத சூழலில் உள்ளார்கள். IFHRMS - இணையத்தில் உள்ளீடு செய்த பிறகே ஊதியம் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. இதை தங்களால் சரிசெய்ய முடியாது என்று மாவட்ட நிர்வாகங்கள் கூறுகின்றன. ஆகவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு, விரைவில் தீர்வு கண்டு, அவ்வாசிரியர்கள் மேற்படி மார்ச் மாத ஊதியத்தைப் பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். ஏராளமான ஆசிரியர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கு மாதா மாதம் EMI கட்டுவதற்கு துணைபுரியுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம். கணையான ஆ

  6. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த மாதம் பணம் ஒதுக்கீடு செய்யவில்லை (Budget) எனவே அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சம்பளம் பெற நிதி ஒதுக்கீடு (Fund Allocation) செய்யும்படி கனிவுடன் கோருகின்றோம்.

  7. சமீப காலங்களில் தமிழகத்தில் ஆசிரியர் - மாணவர் இடையிலான - நல்ல சுமூகமான ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான நல்லுறவுகள் - மோசமடைந்து வருகின்றன. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக, விருப்பு-வெறுப்பின்றி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கூட ஆசிரியர்களுக்கு மிகுந்த பாதிப்புக்களையும், மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் கொடுக்கின்றன. மாணவர்களாலும், அவர்களது பெற்றோர்களாலும் இப்பாதிப்புக்கள் உண்டாகின்றன. ஆசிரியர்களையும், பெண் ஆசிரியர்களையும் தரக்குறைவாகப் பேசுவதும், தாக்குவதும் ஆகிய விரும்பத்தகாத மோசமான கலாச்சாரம் சமீப காலங்களில் தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மாணவர்களை

  ReplyDelete
  Replies
  1. முதல் கோரிக்கையாக மனமொத்த மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு சென்று சேர்த்திய சங்கத்திற்கு உளங்கனிந்த நன்றிகள் பல..கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் தொடர் நினைவூட்டல் செய்து கோரிக்கையை வென்றெடுக்க வேண்டுகிறேன்.

   Delete
  2. நாமும் நமது கோரிக்கையை முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் அனுப்புவோம்

   Delete
  3. முதலமைசச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்புவோம் .well said

   Delete
 14. நல்வழிப்படுத்துவதற்கும், ஆசிரியர்களுக்கு, பணிப்பாதுகாப்பு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டாக வேண்டும். இவைகளைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அதற்குரிய சட்ட முன்வடிவைத் தயாரிப்பதற்கு ஒரு சிறந்த வல்லுநர் குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்.

  8. ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தெரிவிக்காமல், அவர்களது பணி நியமனங்களுக்கும் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், அவர்களது பணி நியமனங்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தொடர்ந்து 10, 12 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் அவ்வாசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இருந்து முழுமையாக விலக்களித்து, அவர்கள் அனைவரையும் பணிநியமன நாளில் இருந்து பணி வரன்முறை செய்து, அவர்களின் இல்லங்களில் தொடர்ந்து விளக்கு எரிய துணைபுரிய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுகிறோம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி