எந்த BOOSTER க்கும் கட்டுப்படாத EMIS. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2022

எந்த BOOSTER க்கும் கட்டுப்படாத EMIS.

ஆசிரியர்களை தொலைத்துவிட்டு, மாணவர்களை தேடமுடியாது...

எந்த BOOSTER க்கும் கட்டுப்படாத EMIS.


ஆசிரியர்களை மட்டுமே தாக்கும் அரிய வகை virus ஆக Update ஆகிக் கொண்டிருக்கின்றது EMIS.


ஒவ்வொரு நாளும் உருமாறி, உருமாறி பலவழிகளில்  நடத்தப்படும் தாக்குதல் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் படும் வேதனையை, எப்படி சாதனையாகப் பார்க்க முடிகின்றது எனப் புரியவில்லை.


தொழில்நுட்பம் என்பது செய்கின்ற ஒரு பணியை எளிதாக்குவதற்கான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் எளிதான ஒரு பணியே எவ்வளவு கடினமாக்க முடியுமோ , அவ்வளவு கடினமாக்கிக் கொண்டிருப்பதற்குப் பெயர்தான்  EMIS என்னும் தொழில்நுட்பம்..


யாரோ சிலர் இருந்த இடத்தில் இருந்து புள்ளி விபரங்களை பார்ப்பதற்காக ,இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்த முடியாமல் EMIS பின்னே சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.


ஒரே நேரத்தில் பலகோடி பேர் பயன்படுத்தும்

Youtupe

WhatsApp

Twitter

Facebook 

இவையெல்லாம் இதுவரை முடங்கியதாக வரலாறு இல்லை.. ஆனால் இரண்டு லட்சத்திற்கு உள்ளாக உள்ள ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தும் EMIS தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து, ஒரே ஒரு நாள் கூட ஒழுங்காக இயங்கியதாக வரலாறு கிடையாது..


ஒரு வாரத்தில் நடத்திவிடக் கூடிய. பொதுமாறுதல் கலந்தாய்வை இரண்டு மாதங்களைக் கடந்தும் இன்னும் இழுத்து நடத்தி முடிக்க முடியாத பெருமை EMIS க்கு மட்டுமே உண்டு.

உங்களுக்குப் புள்ளி விபரங்கள்தான் முக்கியமெனில், அதற்குத் தனியே பணியாளர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.


IPhone களில்

System களில்

இந்த App ஐ

பயன்படுத்தும் வகையில் ஏன் இன்னும் மாற்றியமைக்கவில்லை?


அலைபேசிக்குள் அகப்பட்டபிறகு Power glass அணியத் தொடங்கிய ஆசிரியர்கள் அலைபேசிக்குள் புத்தகப் பட்டியல்கள் சுகாதார உணவுகள் உடல்நலக்குறிப்புகளை zoom செய்து ஏற்றி முடிப்பதற்குள் ஐயோ! பாவம் எனச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.


ஏன் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கற்பிக்க விடாமல் நேரத்தை விரயம் செய்கின்றீர்கள்.

தவறுகளைச் சரி செய்ய சொன்னால், இன்னொரு பெரும் தவறைச் செய்கின்றீர்கள்.

துறையில் உள்ள

தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சொன்னால், அதனைச் சரி செய்யாமல்

உத்தரவுகளாலும்,17 A ,17 B என மிரட்டல்களாலும் பயமுறுத்த எத்தனிக்கும் நடைமுறையை என்னவென்று சொல்வது?


உங்கள் தொழில்நுட்பம் சரி என்றால், ஏன் இரவு 9 மணி வரைக்கும்  server ஐ open ல் வைத்துள்ளீர்கள்.Attendance போடும் நேரமான காலை 10 மணிக்கே close செய்துவிட வேண்டியது தானே?


தீர்வுகள்தான் பிரச்சினையைச் சரி செய்யுமே தவிர, உத்தரவுகள் அல்ல..

ஒரு தொழில்நுட்பத்திற்காக ஒரு துறையே உருக்குலைந்து கொண்டிருக்கின்றது என்னும் உண்மையை எப்பொழுது உணரப்போகின்றீர்கள்?


இனி எங்கேனும் EMIS ஐக் காட்டி அதிகாரிகள் மிரட்டினால், அந்த அதிகாரியை மறுநாள் உங்கள் பள்ளிக்கு  வரச்சொல்லி, அவரையே ஒருநாள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்..அவரும் EMIS ன் பெருமை உணரட்டும்.


பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு பேசுவதுபோல, அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அறம் தவறிப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது.


EMIS ன் தரத்தை மேம்படுத்தாமல், இனியும் பள்ளியின் நேரத்தை வீணடிக்கத் துறை முயலுமென்றால், தொடர்ந்து ஒருவாரம் பள்ளிக்கு காலையில் பெற்றோர்களை வரச்சொல்லுங்கள்.

அவர்கள் முன்னிலையில் EMIS படுத்தும்பாட்டை வெளிச்சம் போட்டுக் காண்பியுங்கள்.

EMIS ன் முகம் உணரட்டும்.


ஆசிரியர்களுக்குப் பணியை எளிதாக்குகின்றோம் என்னும் பெயரில், அவர்களைப் பலிகொடுத்து விடாதீர்கள்..


ஆசிரியர்களைத் தொலைத்துவிட்டு,

மாணவர்களைத் 

தேட முடியாது..


- ஆசிரியர்களின் குரல்

3 comments:

  1. பின்குறிப்பு: இவ்வளவு கஷ்டப்பட்டு நாம பதிவு பன்ற Data சில நேரங்களில் மாய மந்திரமாய் மறைந்து விடும். மொத்த கோட்டையும் அழித்துவிட்டு புதிதாக கோடு போட வேண்டும்.

    ReplyDelete
  2. Idhula part time teachers cs teachers yega help yedhum illaya sir negaley solluga sir part time teachers Naga school la work panala nu soilragaley yegaluku support ah yegala permanent pana soilalam la sir idhala yegaluku life marum ungal velai paluvum korayum la sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி