Flash News : TET தேர்வை B.Ed, DTEd இறுதி ஆண்டு படிப்பவர்களும் எழுதலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2022

Flash News : TET தேர்வை B.Ed, DTEd இறுதி ஆண்டு படிப்பவர்களும் எழுதலாம்.

 


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14.03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது.


 விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 13.04.2022 ஆகும் . ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில் பக்கம் எண் 4 , வரிசை எண் 3 ( b ) யில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு முடித்து பி.எட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் , அறிவிக்கையின் பக்கம் எண் 2 , வரிசை எண் 3 ( a ) ல் தாள் 1 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teacher Education ) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . எனவே , பி.எட் இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teacher Education ) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது .

12 comments:

  1. Collection agaliya, jobless exam
    fess 500.

    ReplyDelete
  2. B.ed graduates eligible to write paper 1 ?

    ReplyDelete
  3. B.ed graduates eligible to write paper 1?

    ReplyDelete
  4. திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

    ReplyDelete
  5. காசு விண்ணப்பம் இதானா டா

    ReplyDelete
  6. போஸ்டிங் போடுங்கடா

    ReplyDelete
  7. For paper 1 PSTM certificate necessary?

    ReplyDelete
  8. mirthika coaching centre ug trb english... materials availabe .contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி